ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு சொல்லத் தேவையில்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.
ஜனநாயகத்தில் என்ன செய்ய வேண்டும் என்று இந்தியாவுக்கு சொல்லத் தேவையில்லை என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்துக்கான, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது.இது தவிர ஜி20 நாடுகளின் தலைவராகவும் இந்தியா பொறுப்புபேற்றுள்ளது.
undefined
இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு டிசம்பர் மாதத் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தியத் தூதர் ருச்சிரா கம்போஜ் நேற்று பொறுப்பேற்றார். ஐ.நா.வுக்கான தூதராக நியமிக்கப்பட்ட முதல் பெண் தூதரும் ருச்சிரா கம்போஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.நா.வில் இந்தியத் தூரதர் ருச்சிரா கம்போஜ் தலைமைப் பொறுப்பில் அமர்ந்தபின் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு ருச்சிரா கம்போஜ் அளித்த பதிலில் “ உலகில் தீவிரவாதத்தை ஒழிக்கவும், பல்வேறு நாடுகளுக்கு இடையே பரஸ்பரத்தை உருவாக்க இந்தியா செயல்படும்.
நான் சொல்ல விரும்புவது என்பது, இந்தியா ஜனநாயகத்தின் தாயாக இருக்கிறது, ஜனநாயக்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தியாவுக்கு சொல்லத் தேவையில்லை. உலகிலேயே மிகப்பழமையான நாகரீகத்தை கொண்டதுஇந்தியா என்பது உங்களுக்குதெரியும் என நினைக்கிறேன்.
இந்தியாவில் உள்ள ஜனநாயகம் என்பது 2,500 ஆண்டுகள் வேறூன்றிய பழமையானது. ஜனநாயகத்தின் தூண்களான சட்டப்பேரவை, நிர்வாகம், நீதித்துறை மற்றும் நான்காவது தூண் பத்திரிகை. மற்றும் மிகவும் துடிப்பான சமூக ஊடகம் எல்லாம் அப்படியே உள்ளன. அதனால்தான் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது.
உலகில் வாழ்வதற்கு மிகக் ‘காஸ்ட்லி’யான 10 நகரங்கள் என்ன? இந்திய நகரம் இருக்கா?
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைுயம் நாங்கள் உலகின் மிகப்பெரிய அளவில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்துகிறோம். ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப்படியும் பேச சுதந்திரம் உள்ளது, அப்படித்தான் எங்கள் நாடு செயல்படுகிறது. எங்கள் தேசம் விரைவாக சீர்திருத்தம், மாற்றம் மற்றும் மாறுதல் அடைந்து வருகிறது, அந்தப் பாதையும் ஸ்வரஸ்யமாக உள்ளது. இதை நான் சொல்ல வேண்டியதில்லை, நீங்கள் என் பேச்சைக் கேட்க வேண்டிதும் இல்லை, இந்தக் கருத்தை மற்றவர்கள்தான் சொல்கிறார்கள்” எனத் தெரிவித்தார்