உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான 10 நகரங்களில் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்று உலகளவிலான சர்வேயில் தெரியவந்துள்ளது என்று ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான 10 நகரங்களில் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்று உலகளவிலான சர்வேயில் தெரியவந்துள்ளது என்று ப்ளூம்பர்க் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 172 நகரங்களை ஆய்வு செய்தும், அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், வாழ்வாதாரச் செலவு ஆகியவற்றை ஆய்வு செய்து, வேர்ல்ட்வைட் காஸ்ட் ஆப் லிவிங் ரிபோர்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி
அதில், கடந்த ஆண்டைவிட 2022ம் ஆண்டில் உலகளவில் நகரங்களின் வாழ்வாதாரச் செலவு 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்திருந்த இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் இந்த ஆண்டு 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஹாங்காங், லாஸ் ஏஞ்செல்ஸ் நகரங்கள் 5 இடங்களுக்குள் சரிந்துவிட்டன.
இந்த பட்டியலில் ஆசியாவில் உள்ள எந்த நாடுகளின் நகரங்களும் இடம் பெறவில்லை. டோக்கியோ மற்றும் ஓசாகா நகரங்கள்கூட முறையே 24 மற்றும் 33வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
உலகிலேயே மிகவும் மலிவான, வாழ்வதற்கு குறைந்த செலவுள்ள நகரம் சிரியாவில்உள்ள டமாஸ்கஸ் நகரமும், லிபியாவில் உள்ள திரிபோலிநகரங்கள்தான்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் டாப்-10 பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரம் கடந்த ஆண்டு 24-வது இடத்தில் இருந்தநிலையில் 8-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் 20-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவுடனான உறவில் தலையிடாதீர்கள் என அமெரிக்காவை சீனா எச்சரித்தது:பென்டகன் அறிக்கை
வேர்ல்ட்வைட் காஸ்ட் ஆப் லிவிங் ரிபோர்ட் தயாரித்த எக்னாமிக் இன்டலஜன்ஸ் யூனிட் தலைவர் உபானசா தத் கூறுகையில் “ ரஷ்யா உக்ரைன் போர், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடை, சீனாவில் கடைபிடிக்கப்பட்ட ஜூரை கோவிட் கொள்கை போன்றவை சப்ளை சங்கிலியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. இது தவிர வட்டிவீத உயர்வு, பரிமாற்றச் செலவு ஆகியவை உலகளவில் வாழ்வாதாரச் செலவை அதிகரி்த்தன”எனத் தெரிவித்தார்
டாப்-10 நகரங்கள் பட்டியல்