தெருவில் வசிக்கும் ஒருவர் மாதம் ரூ.1.27 லட்சம் வரை சம்பாதித்தும் தெருவில் வசித்து வருவதும் அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்தும் சொந்த வீடும் உள்ளது என்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தெருவில் வசிக்கும் ஒருவர் மாதம் ரூ.1.27 லட்சம் வரை சம்பாதித்தும் தெருவில் வசித்து வருவதும் அவருக்கு 5 கோடிக்கு மேல் சொத்தும் சொந்த வீடும் உள்ளது என்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 5 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் தெருவோரத்தில் வசிக்கும் மனிதனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் 21 ஆம் நூற்றாண்டில், எல்லாம் சாத்தியம் என்று தோன்றுகிறது. லண்டனில், வீடற்ற ஒரு மனிதன் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 1.27 லட்சம் வாடகை வாங்குகிறார். அந்த நபரின் பெயர் டோம். டோம் தனது இளம் வயதில் ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானார். டோம் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார். வகுப்பறையில் பின் தங்கிய மாணவராக இருந்தார். ஆனால் அவரது தடகள திறமை அவரை உதவித்தொகை பெற அனுமதித்தது. ஆனால் அவர் இளமைப் பருவத்தை நெருங்க, அவரது வாழ்க்கை மாறத் தொடங்கியது.
இதையும் படிங்கள்: இன்று முதல் ஜி20 நாடுகள் தலைவராக இந்தியா : நம்மால் முடியும்: பிரதமர் மோடி உறுதி
இதுக்குறித்து பேசிய அவர், போதை காரணமாக தெருக்களில் இருக்கிறேன். எனக்கு உண்மையாகவே சொத்து உள்ளது என்றார். நான் வெறுமனே பைத்தியமாகிவிட்டேன். நான் 13 வயதில் மரிஜுவானாவைப் பயன்படுத்த ஆரம்பித்தேன், படிப்படியாக மற்ற எல்லாவற்றிலும் மாறினேன். நான் 17 அல்லது 18 வயதில் ஹெராயின் பயன்படுத்தத் தொடங்கினேன். உடனே நான் அதற்கு அடிமையானேன். மறுவாழ்வுக்குச் சென்ற பிறகு, ஏழு வருடங்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க முடிந்தது. அவர் நீண்ட காலமாக போதைப்பொருளின்றி இருந்ததால், மீண்டும் போதைப்பொருளை உட்கொண்டால், தன்னால் நிறுத்த முடியும் என்று நம்பினேன்.
இதையும் படிங்கள்: உலகில் வாழ்வதற்கு மிகக் ‘காஸ்ட்லி’யான 10 நகரங்கள் என்ன? இந்திய நகரம் இருக்கா?
இருப்பினும், இறுதியில் போதை பொருளுக்கு திரும்பிவிட்டேன். வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் போதைப்பொருள் வாங்க பயன்படுத்தப்படுகிறேன். லண்டன் தெருக்களில் பிச்சை எடுத்து தினமும் 200 முதல் 300 பவுண்ட் வரை சம்பாதிக்கிறேன். மேலும் எனது வீட்டை வாடகைக்கு விட்டு அதில் கிடைக்கும் பணத்தையும் போதைப்பொருளுக்கு செலவிடுகிறேன். நான் ஸ்டேஷனுக்கு வெளியே தூங்குகிறேன் என்றார். மேலும் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இனி என்னை ஆதரிக்க மாட்டார்கள். 530,000 பவுண்டுகள் (சுமார் ரூ. 5.19 லட்சம்) மதிப்புள்ள எனது வீட்டை விற்றால், எனது அடிமைத்தனம் என்னை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று டோம் கவலை தெரிவித்தார். மேலும் அவர் போதைப்பொருளைச் சார்ந்து இருக்க விரும்பவில்லை. ஒரு வழக்கமான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவே தெரிவித்தார்.