இலங்கையில் கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குறைத்து நேற்று அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குறைத்து நேற்று அறிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்துக்குப்பின், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது இதுதான் முதல்முறையாகும். அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாகக் குறைந்துவிட்டதால் பெட்ரோல்,டீசல் இறக்குமதி செய்ய முடியாமல் இருந்த இலங்கை, முதல்முறையாக சில்லரை விலை குறைப்பு செய்துள்ளது.
இலங்கையின் அதிபர் பதவிக்கு 5 பேர் போட்டி! வெற்றி பெறப்போவது யார்?
இந்த புதிய விலைக் குறைப்பு நேற்று இரவு 10 மணி முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.இதன்படி, பெட்ரோல் மற்றும் டீசலில் லிட்டருக்கு ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் பெட்ரோல், லிட்டர் ரூ.50, டீசல் ரூ.60 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கிளையான லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனமும் விலைக் குறைப்பை தாங்களும் அமல்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசிடம்வெளிநாட்டிலிருந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு வாங்கும் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை.இதையடுத்து, கடந்த மாதம் 27ம் தேதி முதல் இலங்கையில் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை அங்கிருந்தே மீள வேண்டும். மற்ற நாடுகளிடம் இருந்து அல்ல!
இலங்கையில் பொருளாதாரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் இறக்குமதிக்கு கூடஅரசிடம் பணம் இல்லை. இதையடுத்து நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் தினசரி பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல், டீசலுக்காக மணிக்கணக்கில் நீண்டவரிசையில் கடந்த சில மாதங்களாகவே காத்திருந்தார்கள்.
இதில் பெட்ரோல், டீசல் விலையும் பல முறை உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் வாங்கவரிசையில் நின்றதிலேயே ஏறக்குறையை 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் கடந்த சில மாதங்களாக சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்தனர்
சமையல் கேஸில் சமைத்த இலங்கை மக்கள் விறகு அடுப்புக்கு மாறிவிட்டனர், பைக், ஸ்கூட்டர் பயன்படுத்தியமக்கள் சைக்கிளுக்கு மாறிவிட்டனர்.
நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவுக்கு தடை... இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு துன்பங்களை அனுபவித்த இலங்கை மக்களுக்கு 6 மாதஙகளில் முதல் விலை குறைப்பு அவர்களுக்கு நிம்மதி பெருமூச்சை தரும், பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்