sri lanka economic crisis: இலங்கை அதிபர் தேர்தல்: மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

By Pothy Raj  |  First Published Jul 18, 2022, 10:41 AM IST

இலங்கை அதிபர் தேர்தல் வரும் 20ம் தேதி நடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கையில் அவசரநிலையை அறிவித்து, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசங்கே உத்தரவிட்டுள்ளார்.


இலங்கை அதிபர் தேர்தல் வரும் 20ம் தேதி நடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கையில் அவசரநிலையை அறிவித்து, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசங்கே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச, மக்கள் போராட்டத்தையடுத்து, அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை அங்கிருந்தே மீள வேண்டும். மற்ற நாடுகளிடம் இருந்து அல்ல!

வரும் 20ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது  புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படஉள்ளார். அதற்கு முன் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்காக அவசரநிலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி, பாதுகாப்புப்படையினர், போலீஸார் எந்த இடத்தையும் சோதனையிடவும், யாரையும் கைது செய்யவும், பொருட்களை பறிமுதல் செய்யவும், ஆயுதங்கள், வெடிபொருட்களை கைது செய்யவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கலவரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் நடத்திய பெண்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டோஸ் இதோ!

புதிய அதிபர் பதவிக்கு 4 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அதிபர் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெருமுனா தலைவர் அனுரா குமாரா திசநாயகே, துலாஸ் அல்ஹாபெருமா ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ஆளும் எல்எல்பிபி கட்சி அதிகாரபூர்வமாக விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.  அதிபர் தேர்தல்  போட்டியில் முன்னணியில் இருப்பவர் ரணில் விக்ரமசிங்கே. ரணில் தேர்ந்தெடுக்கப்பட்டால், 2024ம் ஆண்டுவரை அதிபராக இருப்பார். வரும் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றம் கூடி வாக்கெடுப்பு நடத்தி அதிபரைத் தேர்ந்தெடுக்கிறது.

எம்.பி.க்கள் தேர்தலில் வாக்களி்க்க விடாமல் தடுப்போர், மிரட்டுவோரை கண்காணிக்க அதிபர் ரணில்நேற்று உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையின் அதிபர் பதவிக்கு 5 பேர் போட்டி! வெற்றி பெறப்போவது யார்?

இலங்கையி்ல் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஆட்சியில் நாட்டின்  பொருளாதாரம் அழிவுக்குச் சென்றுவிட்டது.  உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகளை சாமானிய மக்கள் வாங்க முடியாத நிலைக்கு உயர்ந்துவிட்டது. ராஜ பக்ச குடும்பத்தாரை அரசியலைவிட்டே விரட்ட  மக்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் விலகினார். 

ஆனால், அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மக்கள் போராட்டத்துக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இந்த சூழலில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்கவும், விலைவாசி உயர்வைக் குறைக்கவும், இலங்கையை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுவரவும் புதிய அதிபர் வரும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

click me!