Exclusive : இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை அங்கிருந்தே மீள வேண்டும். மற்ற நாடுகளிடம் இருந்து அல்ல!

By Dinesh TGFirst Published Jul 17, 2022, 9:31 PM IST
Highlights

இலங்கையில் என்ன நடந்தாலும், மற்றவர்களை விட அது இந்தியாவை மிகவும் பாதிக்கும். இலங்கை மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என இந்திய அரசு கூறியுள்ளது. எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது அரசியல் தலைவர்களையோ அல்ல. யாரை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தவேண்டும் என்பதை இந்தியா தீர்மானிப்பதாக கருதப்பட்டால், அது நமக்கே பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என முன்னாள் தூதரும் சிறப்பு அதிகாரியுமான வேனு ராஜமோனி தெரிவித்துள்ளார்.
 

ஏசியாநெட் நியூஸ்-ன் 'சம்வாத்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை நெதர்லாந்து நாட்டிற்கான முன்னாள் இந்திய தூதர் வேனு ராஜமோனி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை இல்லாததால் பெரும் விளைவுகளை சந்தித்து வருகிறது. அதைப்பற்றி இந்திய அரசு கவலைப்பட வேண்டுமே தவிர, இலங்கையின் அரசியல் தீர்வுகளை கையாள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் நகர்வுகளை கவனித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை விரைவில் ஏற்படும் என்று நம்ப வேண்டும். இலங்கை மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது, எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவரையோ அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில், இலங்கை அரசியல் நிலைப்பாட்டில் இந்திய முனைப்புடன் இருந்தால் அது நமக்கே பெரும் பின்விளைவை ஏற்படுத்தும். இலங்கையில் யாராவது ஆட்சி அமைத்தால் அவர் இந்தியாவின் வேட்பாளர் என முத்திரை குத்தப்படுவார். ஒருவேளை அவர் தோற்றுவிட்டால், இந்தியா வேறொருவரைப் போட முயற்சித்தது என்பார்கள். எனவே நாம் மிகவும் எச்சரிக்கையுடனும், கவனமாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் என்றார். இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகள் அங்கிருந்தே எடுக்கப்பட வேண்டுமே தவிர வெளியில் இருந்து அல்ல என்றார்.


இலங்கையின் அடுத்தடுத்த சவால்கள்

இலங்கையில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து கருத்து தெரிவித்த தெற்காசிய நிபுணர், "இலங்கைக்கு பெரிய பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. முதலில் அவர்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை நிறுவ வேண்டும். தற்போது அதிபர் மற்றும் பிரதமர் பதவிகள் காலியாக உள்ளது. அவர்களுக்கு அரசியல் நிலைத்தன்மை தேவை. யார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முதலில் அவர் நிதி நெருக்கடியை சமாளிப்பது மட்டுமல்லாமல், அடுத்த 6 அல்லது 8 மாதங்களில் பொதுத் தேர்தலுக்கு தயாராக வேண்டும். அப்போது மக்கள் புதிய அதிபர் மற்றும் பிரதமரையும் தேர்ந்தெடுப்பார்கள். அப்போதுதான் சட்டப்பூர்வமான அரசு நிறுவப்படும் என்றார்.

இலங்கையில், பொதுமக்கள் நடத்திய போராட்டமானது தனிஒரு நபரை குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல, முழு அரசியல் மாற்றத்தை குறிவைத்து நடத்தப்பட்டது. இந்த போராட்டம் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீதான நம்பிக்கை இழப்பை பிரதிபலித்தது. இலங்கையில் புதிய அரசு எவ்வாறு அமையும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஏன்றார்.

ராஜபக்சேவின் செல்வாக்கற்ற தன்மையால், ஜனநாயகத்தில் சர்வாதிகார ஆட்சி இருக்க முடியாது என்பது உறுதியாகியுள்ளது. வம்ச அரசியல் என்றும் எடுபடாது. போதிய விவாதங்கள் இன்றியும், மக்களுக்கு செவிசாய்க்காத மற்றும் முடிவெடுக்காத அரசாங்கங்கள் இருக்க முடியாது. இவையே ராஜபக்சே வம்சத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும், முதலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள் என வேனு ராஜமோனி கூறினார். தொடர்ந்து சர்வதேச நாணய நிதியமும், சர்வதேச சமூகமும் வந்து இலங்கையை இப்பிரச்சனையில் இருந்து மீட்க வேண்டும் என்றார்.

Sri lanka President : இலங்கையின் அதிபர் பதவிக்கு 5 பேர் போட்டி! வெற்றி பெறப்போவது யார்?
 

இலங்கைக்கு உதவிய இந்திய அரசு

இலங்கைக்கு இந்திய அரசு வழங்கிய உதவிகள் குறித்த பேசிய வேனு ராஜமோனி, இலங்கையில் என்ன நடந்தாலும் அது இந்தியாவை பெரிதும் பாதிக்கும். மற்ற நாடுகளை விட அங்கு அரசியல் நிலைத்தன்மை பெற இந்தியா விரும்புவதாக கூறினார். இலங்கையின் கலாச்சாரம், வரலாறு, சமூகம் போன்றவற்றால் நாங்கள் பிணைக்கப்பட்டவர்கள். எனவே இந்தியா தன்னால் இயன்ற அளவிற்கு உடனடி உதவிகளை வழங்கியுள்ளது. ஆனால், இலங்கை பிரச்சனை மிகப் பெரியது என்றார்.

Watch : ராஜபக்சே ராஜினாமைவைத் தொடர்ந்து இலங்கை மக்கள் கொண்டாட்டம்!
 

click me!