இந்தியாவிற்கு வேற்று கிரக வாசிகள் வருவார்கள், உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். ஆசியா கண்டத்தின் பல நாடுகளில் வெள்ளம் ஏற்படும் என்றும் கணித்துள்ளார். யார் அவர்? முன்பு இவர் கூறியது அனைத்தும் 85 சதவீதம் பலித்துள்ளது.
இதற்கு முன்பு 9/11 அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல், ஐரோப்பிய பொருளாதார அமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, செர்னோபில் சோகம், இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் உடையும் என்று கணித்தது, 2004 தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமி, அமெரிக்க அதிபராக பாரக் ஒபாமா வருவார் என்று கணித்து இருந்தது சரியாகவே இருந்தது. அதில் இருந்து இவரது கணிப்பை உலகமே உற்று நோக்கி வருகிறது.
பாபா வாங்கா என்று அழைக்கப்படும் இவரது உண்மை பெயர் வாஞ்ச்சிலியா கஷ்டேரோவ். இவருக்கு 12 வயது இருக்கும் ஏற்பட்ட பலத்த புயலால் பார்வையை இழந்துள்ளார். அதில் இருந்தே, கடவுளின் அனுகிரகம் இவருக்கு இருப்பதாக கூறி வந்தார். உலகில் நடக்கவிருக்கும் பேரழிவுகளை தீர்க்கதரிசியாக பதிவிட்டுள்ளார். இவர் கடந்த 1996ஆம் ஆண்டில் இறந்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு..இது ஆன்மீக ஆட்சியா? திராவிட மாடல் ஆட்சியா ? கடுப்பான தர்மபுரி எம்.பி - வைரல் வீடியோ!
ஆனாலும் 5079 ஆம் ஆண்டு வரை, அதாவது அவரது கணிப்புப் படி அந்த ஆண்டில் உலகம் அழியும் என்றும் அதுவரை என்னென்ன நடக்கும் என்பதையும் குறித்து வைத்து சென்றுள்ளார். அதன்படி, நடப்பு 2022 ஆம் ஆண்டில், ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உக்கிரமான வெள்ளம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் மிக கனமழை பெய்து பெரிய வெள்ளம் ஏற்படும் என்றும், பெரிய நகரங்கள் சில மழை இன்றி, வறட்சியின் பிடியில் சிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சைபீரியாவில் மேலும் ஒரு கடுமையான நோய் தோற்று ஏற்படும். லெதல் வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள். சீதோஷண மாற்றம் காரணமாக இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும். இதனால், வெட்டுக்கிளிகள் அதிகரிக்கும், சிறுகோள்களில் இருந்து வேற்று கிரகவாசிகள் தோன்றுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 2023ல் பூமியின் சுற்றுப்பாதை மாறும்.
மேலும் செய்திகளுக்கு..ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை - கடுப்பான எடப்பாடி பழனிசாமி !
2028ல் வீனஸுக்கு விண்வெளி வீரர்கள் பயணம் செய்வார்கள் என்றும் கணித்துள்ளார். 2046ம் ஆண்டில் உறுப்பு மாற்று தொழில்நுட்பத்தால் மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வார்கள் என்றும் கணித்து இருக்கிறார். 2100ம் ஆண்டு முதல் இரவு மறைந்துவிடும் என்றும், செயற்கை சூரிய ஒளி பூமியின் மற்றொரு பகுதியை ஒளிரச் செய்யும் என்றும் கனிந்துள்ள அவர், 5079 இல் உலகம் அழியும் என்று கணித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவின் எதிரி டூ பாஜக வேட்பாளர் ; யார் இந்த ஜெகதீப் தங்கர் ? முழு தகவல்கள் இதோ !