அதிகமாகப் பரவக்கூடிய, நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கக்கூடிய, புதிய கொரோனா அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமாகப் பரவக்கூடிய, நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கக்கூடிய, புதிய கொரோனா அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒமைக்ரான் வைரஸின் திரிபு வைரஸ்களான பிஏ.4 மற்றும் பிஏ.5 ஆகிய வைரஸ்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்றியுள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
undefined
நல்ல குடும்பம்ப்பா! 35 வயது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்ற 76வயதான எலான் மஸ்க் தந்தை
உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் வல்லுநர் சவுமியா சுவாமிநாதன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ அதிவேகத்தில் பரவக்கூடிய, உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியை அழிக்கக்கூடிய புதிய கொரோநா அலைகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருப்பது அவசியம்.
அதிகமானோருக்கு தொற்று ஏற்படுவது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும், நோய்வாய்படுவோர் எண்ணிக்கையும் உயரும். மாறிவரும் சூழலுக்கு ஏற்ப விரைந்து பதில் அளிக்க, அனைத்து நாடுகளும் புள்ளிவிவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் மனைவி இவானா டிரம்ப் காலமானார்
உலக வங்கி குழுமத்தின் மூத்த ஆலோசகர் பிலிப் ஸ்கெல்லிகென்ஸ் ட்விட்டர் பதிவிக்கு பதில் அளித்து சவுமியா சுவாமிநாதன் இதைத் தெரிவித்திருந்தார். பிலிப் ஸ்கெல்லிகென்ஸ் பதிவிட்ட கருத்தில் “ உலகஅளவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்தது.
ஆனால், இப்போது மீண்டும் தொற்று அதிகரி்த்து, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிகமான வருமானம் ஈட்டக்கூடிய நாடுகள், உயர்நடுத்தர வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளில் கொரோநா பரவல் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய உயர்வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளிலும், பிரேசில் போன்று உயர்நடுத்தர வருமானம் ஈட்டக்கூடிய நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது.
கொரோனாவில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக பிரேசில், அமெரிக்காவில் பரவல் அதிகரித்து வருகிறது.உயரிழப்பு அதிகரி்த்து வருவதுதான் வேதனையாக இருக்கிறது. ” எனத் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் அமைதியை நிலைநாட்ட தமிழ் தலைவர்களிடம் கலந்துரையாட வேண்டும்: ஜனத் ஜெயசூர்யா
இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ், கடந்த வாரம் அளித்தபேட்டியில், “ ஒமைக்ரான் வைரஸின் திரிபுகளான பிஏ.4 மற்றும் பிஏ.5 வைரஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் அனுமதிக்ககப்படுவது அதிகரி்த்து வருகிறது, உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. ஆதலால், உலக நாடுகள் பரிசோதனையைஅதிகப்படுத்த வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
புதிய கொரோனா அலை: தொற்று, உயிரிழப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட தொற்று நோய் குறித்த அறிக்கையில் “ உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்த 5வது வாரமாக அதிகரித்து வருகிறது. 2022,மார்ச் மாதம் வரை குறைந்துவந்த தொற்று படிப்படியாக உயர்கிறது.
ஜூலை 4 முதல் 10வரை, உலகளவில் 57 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்,இது முந்தைய வாரத்தைவிட 6 சதவீதம் அதிகம். உயிரிழப்பு 9800 ஆக இருக்கிறது. ஜூலை 10வரை உலகளவில் 53.30 கோடி பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், 63 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக கடந்த வாரத்தில் பிரான்ஸில் 7.71 லட்சம் பேரும், அமெரிக்காவில் 7.22 லட்சம் பேரும், இத்தாலியில் 6.61 லட்சம் பேரும், ஜெர்மனியில்5.61 லட்சம் பேரும், பிரேசிலில் 3.96 லட்சம் பேரும் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் அமெரிக்காவில் 1987 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, பிரேசிலில் 1639 பேர், சீனாவில் 692 பேர், ஸ்பெனில் 619 பேர், இத்தாலியில் 574 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்துக்குப்பின் கிழக்கு ஆசியாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 1.64 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த வாரத்தைவிட 5 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் அதிகபட்சமாக 1.20 லட்சம் பேரும், இந்தோனேசியாவில் 17ஆயிரமும், தாய்லாந்தில் 14ஆயிரம்பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.