தமிழுக்கும் மதிப்பு கொடுக்கும் சிங்கப்பூர்! பிரதமரின் தேசிய தினச்செய்தியை தமிழில் வாசிக்கும் அமைச்சர் சண்முகம்

By Dinesh TG  |  First Published Aug 4, 2023, 10:04 AM IST

சிங்கப்பூர் தேசிய தினச் செய்தியை வரும் 8ம் தேதி இரவு அந்நாட்டு மக்களுக்காக பிரதமர் லீ சியன் லூங் வாசிக்கிறார். அதனை அமைச்சர் சண்முகம் தமிழில் வாசிப்பார் என சிங்கப்பூர் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


சிங்கப்பூர் நாட்டின் தேசிய தினம் வரும் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வரும் 8ம் தேதி இரவு அந்நாட்டு மக்களுகாக பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றுகிறார். அதன் தமிழாக்கத்தை அந்நாட்டு சட்டத்துறை அமைச்சரும், பூர்வாங்க தமிழருமான கா.சண்முகம் தமிழில் வாசிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய தினச் செய்தி வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு 9 மணிக்கு சிங்கப்பூரின் வசந்தம் தொலைக்காட்சியிலும் ஒலிவடிவம், 96.8 வானொலியிலும் தமிழ் உரை ஒலி, ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமைச்சர் ஈஸ்வரன் தமிழ் மொழியில் தேசிய தினச் செய்தியை வழங்கிவந்த நிலையில், இந்த ஆண்டு அமைச்சர் சண்முகம் வாசிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், ஆங்கிலத்தில் வழங்கும் தேசிய தினச் செய்தியை நியூஸ் ஏஷியா செய்தி சேனல் மாலை 6.45 மணிக்கு ஒளிபரப்பாகும். மாண்டரின் மொழியில் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் வழங்குகிறார். மலாய் மொழியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி வழங்குகிறார்.
தமிழ் மொழியில் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம் வழங்குகிறார்.

ஐ லவ் சிங்கப்பூர்! 58வது தேசிய தினம் கொண்டாட தயாராகும் சிங்கை மக்கள்!

சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் பிரதமரின் தேசிய தினச் செய்தியை www.pmo.gov.sg மற்றும், பிரதமர் அலுவலக இணையப் பக்கத்திலும் www.youtube.com/pmosingapore முகவரியில் யூடியூப் தளத்திலும் காணலாம்.

Tap to resize

Latest Videos

சிங்கப்பூரில் செவிலியர் பற்றாக்குறை.. கொட்டிக்கிடக்கும் வாய்ப்பு - ஆவலோடு காத்திருக்கும் இந்திய செவிலியர்கள்!
 

click me!