சிங்கப்பூருக்கு குடியேறும் ஆஸ்திரேலிய சிறுமி.. 12 வயதில் Retire ஆனா தொழிலதிபர் - மாஸ் காட்டும் Pixie Curtis!

By Ansgar R  |  First Published Aug 3, 2023, 4:37 PM IST

அந்த காலத்து சிறுவர், சிறுமியர்களை ஒப்பிடும்போது, இந்த காலத்து பிள்ளைகள் சற்று சிறந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்று தான் கூறவேண்டும். இதற்கு ஒரு சிறந்த சான்றாக அமைந்துள்ளார் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஒரு 12 வயது சிறுமி பிக்ஸில் கர்டிஸ்.


நாமெல்லாம் நமது 12வது வயதில் எல்லோரையும் போல 7ம் வகுப்பு படித்து வந்திருப்போம், நிச்சம் அந்த வயதில் தொழில் துவங்குவது என்றால் என்ன என்பது கூட நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இக்கால குழந்தைகள் அப்படி அல்ல, சிலர் டிஜிட்டல் மோகத்தில் மூழ்கினாலும், பலரை அதை ஒரு சிறந்த வாய்ப்பகத்தான் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த பதிவில் நீங்கள் காணவிருப்பதும் அப்படிப்பட்ட ஒரு சிறுமியை பற்றித்தான், அவர் பெயர் Pixie Curtis, ஆஸ்திரேலியா நாட்டில் பிறந்த இந்த சிறுமிக்கு வயது வெறும் 12. ஆனால் Pixie's Fidgets என்ற நிறுவனத்தின் தலைவர் இவர், தனது தாயார், ராக்ஸி ஜசென்கோவுடன் இணைந்து, கடந்த 2021ம் ஆண்டு Pixie's Fidgets என்ற நிறுவனத்தை துவங்கி செயல்பட்டு வருகின்றார் அவர். 

Tap to resize

Latest Videos

கனடாவில் உலகின் மிகப் பழமையான ஜெல்லி மீன் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு! அதுக்கு பேரு என்ன தெரியுமா?

ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த சிரமப்படும் குழந்தைகளுக்காக உருவாக்கப்படும் பொம்மைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றது அந்த நிறுவனம். தற்போது 12 வயது நிரம்பியுள்ள Pixieயின் மாத வருமானம் சுமார் 11 கோடி ரூபாய் என்பர் கூறப்படுகிறது. Pixieயிடம் அவருக்கென்று ஒரு உயர் ரக பென்ஸ் கார் கூட உள்ளதாம், ஆனால் அதை அவரே ஓட்டிச்செல்லும் வயது கூட இன்னும் அவருக்கு வரவில்லை என்பது தான் ஆச்சர்யம். 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் தனது தாயுடன் இணைந்து அந்த நிறுவனத்தை வளர்த்த அந்நிறுவன தலைவர் Pixie, தற்போது இந்த இளம் வயதில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூர் நாட்டில் தனது படிப்பை துவங்க அவர் திட்டமிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ROXY JACENKO (@roxyjacenko)

தற்போது ஆசியாவில் பணிபுரியும் அவரது தந்தை ஆலிவர் கர்ட்டிஸுடன் வாழ்வதற்காக சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு Pixieயின் குடும்பம் தயாராகி வருகின்றது. சிங்கப்பூரின் பிரபல ஆர்ச்சர்ட் சாலைக்கு அருகில் ஒரு சொகுசு குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளது அந்த குடும்பம். மேலும் Pixie மற்றும் அவரது ஒன்பது வயது சகோதரர் ஹன்டர் ஆகிய இருவரும் சிங்கப்பூரில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் படிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூருக்குச் செல்வதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவில் உள்ள தனது நண்பர்களிடம் இருந்து விடைபெரும் முன், ஆஸ்திரேலியாவின் சிட்னியின் நகரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் Pixie தனது பிறந்தநாள் விழாவை பிரமாண்ட முறையில் நடத்தியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3ஆவது தூக்குத்தண்டனை - சிங்கப்பூர் அரசு அதிரடி!

click me!