கனடாவில் உலகின் மிகப் பழமையான ஜெல்லி மீன் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு! அதுக்கு பேரு என்ன தெரியுமா?

By SG Balan  |  First Published Aug 3, 2023, 4:11 PM IST

ஜெல்லி மீன்கள் பாலிப்ஸ் மற்றும் மெடுசாஸ் என்ற இரண்டு வேறுபட்ட வடிவங்களை உள்ளடக்கிய சிக்கலான வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளன.


கனடாவில் 505 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான ஜெல்லி மீன்களை கண்டுபிடித்துள்ளது. அந்நாட்டில் உள்ள பர்கெஸ் ஷேல் புதைபடிவ தளத்தில் ஒரு பாறைக்குள் 182 புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜெல்லிமீன்கள் 95 சதவிகிதம் நீரால் ஆனவையாகவும் விரைவாக சிதைவுக்கு ஆளாகக்கூடியவையாகவும் இருப்பதால்வ இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.

பல புதைபடிவங்கள் ஆரம்பத்தில் 1980கள் மற்றும் 1990களில் பர்கெஸ் ஷேலில் சேகரிக்கப்பட்டன. பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் புதைபடிவங்களைப் பராமரித்துவரும் டொராண்டோவில் உள்ள ராயல் ஒன்டாரியோ அருங்காட்சியகத்தில் கூட இல்லாத ஜெல்லி மீன்களைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைந்தனர்.

Tap to resize

Latest Videos

"நீங்கள் தண்ணீருக்கு வெளியே ஒரு ஜெல்லிமீனைப் பார்த்தால், இரண்டு மணிநேரம் கழித்து அது வெறும் பந்து போல ஆகிவிடும்" என்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர் ஜீன்-பெர்னார்ட் கரோன் கூறுகிறார். ராயல் சொசைட்டி இதழில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் இந்த பழமையான ஜெல்லி மீன்கள் பற்றிய விவரிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விற்பனை 7 சதவீதம் சரிவு! நகை வாங்க ஆர்வம் குறைந்தது ஏன்? உலக தங்க கவுன்சில் தகவல்

இந்த புதைபடிவங்கள் உண்மையில் ஜெல்லிமீன்களின் புதைபடிவங்கள்தான் என்பதை, டொராண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோ மொய்சியுக் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்து உறுதி செய்தனர். அவர்கள் அதற்கு Burgessomedusa phasmiformis என்று பெயரிட்டுள்ளனர். இது ஒரு வயது வந்த ஜெல்லிமீனின் ஆரம்பகால பதிவைக் குறிக்கும் ஒரு புதிய இனமாகும்.

இந்தப் பழைய ஜெல்லி மீன் பேக்-மேன் வீடியோ கேமில் வரும் ஜெல்லி மீனைப் போல தனித்துவமான உடல் வடிவம் கொண்டிருக்கிறது. மணி வடிவ உடலுடன் சுமார் 20 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கிறது. இந்த ஜெல்லிமீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கடியில் மண் ஓட்டத்தில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜெல்லி மீன்கள் பாலிப்ஸ் மற்றும் மெடுசாஸ் என்ற இரண்டு வேறுபட்ட வடிவங்களை உள்ளடக்கிய சிக்கலான வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்டுள்ளன. ஜெல்லி மீன்களின் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களில் ஒன்றான பாலிப் நிலையில், அவை கடற்பரப்பில் தங்கி, பாலினமற்ற முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர், அவை சுதந்திரமாக நீந்தக்கூடிய பிற ஜெல்லி மீன்களுடன் இனச்சேர்க்கை செய்யும் திறன் கொண்ட மெடுசாக்களாக முதிர்ச்சியடைகின்றன.

முந்தைய அகழ்வாராய்ச்சிகளில் 560 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாலிப்களின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த கண்டுபிடிப்பு அக்காலத்திலிருந்து ஒரு பெரிய நீச்சல் ஜெல்லி மீன் பற்றிய முதல் உறுதியான ஆதாரத்தை வழங்குகிறது.

ஐ லவ் சிங்கப்பூர்! 58வது தேசிய தினம் கொண்டாட தயாராகும் சிங்கை மக்கள்!

click me!