இலங்கையின் எப்பாவலவில் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை, எப்பாவலவில் காவல்துறைக்குட் பட்ட எல்லையில் அமைந்துள்ள சந்தரஸ்கம பிரதேசத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக எப்பாவலவின் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேபோல், உயிரிழந்த இளைஞரின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.. டாக்டர் உள்பட பல ஆண்களை நைசாக ஏமாற்றிய பெண் - சென்னை போலீஸ் வலைவீச்சு!
7 பேர் கொண்ட அந்தக் குடும்பத்தில் இதுவரை 5பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இணைந்தால் அதிமுகவின் நிலை என்ன.? ஜெயக்குமார் அதிரடி பதில்