ரஷ்யாவின் லூனா-25 தரையிறங்குவதில் சிக்கல்! விண்கலத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு!

By SG Balan  |  First Published Aug 19, 2023, 11:33 PM IST

லூனா-25 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதை தற்போது ஏற்பட்டுள்ள அவசரநிலை பிரச்சினை தரையிறங்குவதைத் தாமதப்படுத்துமா என்று ரஷ்யா தரப்பில் கூறப்படவில்லை.


ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் சனிக்கிழமையன்று சந்திரனில் தரையிறங்குவதை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கையின்போது தொழில்நுட்பக் கோளாறால் அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் (Roscosmos) தெரிவித்துள்ளது.

"விசாரணையை தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுப்பாதையில் மாற்றுவதற்கு உந்துதல் அளிக்கப்பட்டபோது இந்த கோளாறு ஏற்பட்டது" என்று ரோஸ்கோஸ்மோஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளது. விண்கலத்தின் தானியங்கி பகுதியில் ஒரு அவசர நிலை பிரச்சினை ஏற்பட்டதால் திட்டமிட்ட நகர்வை செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறியிருக்கிறது.

Tap to resize

Latest Videos

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பின் ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய விண்கலம் லூனா-25. இந்த விண்கலம் அந்நாட்டின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து ஆகஸ்ட் 11ஆம் தேதி சோயுஸ் 2.1வி ராக்கெட்டில் விண்ணுக்கு ஏவப்பட்டது. கடந்த புதன்கிழமை நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

லடாக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 9 வீரர்கள் உயிரிழப்பு; ஒருவர் படுகாயங்களுடன் மீட்பு

லூனா-25 நிலவின் தென் துருவத்தில் உள்ள போகஸ்லாவ்ஸ்கி பள்ளத்தாக்கிற்கு வடக்கே திங்கள்கிழமை தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள அவசரநிலை பிரச்சினை தரையிறங்குவதைத் தாமதப்படுத்துமா என்று ரோஸ்கோஸ்மோஸ் கூறவில்லை.

ஜூன் மாதம், ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ், அதிபர் விளாதிமிர் புடினிடம், இதுபோன்ற பணிகள் ஆபத்தானவை என்றும், வெற்றி வாய்ப்பு 70 சதவிகிதம் தான் இருக்கும் என்றும் கூறினார் எனத் தகவல்கள் வெளியாகின.

லூனா-25 சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறங்கினால், அடுத்த ஓர் ஆண்டுக்கு நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. லூனா-25 நிலவின் மேற்பரப்பில் உள்ள மண் மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளது.

அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!

லூனா-25 விண்கலத்தின் லேண்டரில் பொருத்தப்பட்ட கேமராக்கள் ஏற்கனவே விண்வெளியில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் தொலைதூர காட்சிகளை எடுத்துள்ளன.

உக்ரைனுடனான போருக்கு மத்தியில் மேற்கு நாடுகளுடன் விண்வெளி திட்டங்களில் நீண்டகால ஒத்துழைப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதனால், நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் விண்வெளித் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப ரஷ்யா முயல்கிறது.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக எதிர்கால விண்வெளிப் பயணங்களில் மாஸ்கோவுடன் ஒத்துழைக்க மாட்டோம் என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி அறிவித்தது. அதற்கு பதில் அளித்த ரஷ்யா, ஐரோப்பாவின் ஆதரவு இல்லாவிட்டாலும் தனது சொந்த திட்டத்துடன் நிலவை ஆராய்ச்சி செய்யும் திட்டத்தை மேற்கொள்வும் என்று கூறியது.

வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி! டிசம்பர் வரை உள்நாட்டுத் தேவையை சமாளிக்க நடவடிக்கை

click me!