அமெரிக்கா தான் எல்லாதுக்கும் காரணமா? கோவிட் தோற்றம் குறித்து ரஷ்யா வெளியிட்ட 2000 பக்க அறிக்கை..

Published : Aug 19, 2023, 05:37 PM ISTUpdated : Aug 19, 2023, 05:40 PM IST
அமெரிக்கா தான் எல்லாதுக்கும் காரணமா? கோவிட் தோற்றம் குறித்து ரஷ்யா வெளியிட்ட 2000 பக்க அறிக்கை..

சுருக்கம்

கொரோனா பரவத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதிலும், கொரோனாவின் எப்படி உருவானது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.

பெரிய பெரிய மருந்து நிறுவனங்களும் மற்று ம்US Deep State என்ற ரகசிய அமைப்பில் உள்ள சில தனிநபர்கள் உலகளாவிய ஆதிக்கத்தின் நோக்கத்துடன் கொரோனா தொற்றுநோயை பரப்ப திட்டமிட்டதாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. ஹிலாரி கிளிண்டன், பராக் ஒபாமா, ஜோ பிடன் மற்றும் ஜார்ஜ் சொரோஸ் ஆகியோரும் இந்த சதியில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கொரோனா பரவத் தொடங்கி 4 ஆண்டுகள் ஆன போதிலும், கொரோனாவின் எப்படி தோன்றியது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. எனினும் சீனா தான் கொரோனாவை திட்டமிட்டு பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. சீன இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் தற்போது ரஷ்யா அமெரிக்காவை பகிரங்கமாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் கொரோனாவின் தோற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்த வைரஸின் உருவாக்கத்திற்கு ரஷ்யா நீதியை நாடுகிறது, மேற்கு நாடுகள் அதன் தோற்றத்தை மறைத்து அறிவியல் மற்றும் பத்திரிகை விசாரணைகளை அடக்குகிறது. ரஷ்யா கடந்த 18 மாதங்களில் தங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கும் 2,000 பக்கங்களுக்கு மேல் அறிக்கைகள் அடங்கிய விரிவான ஆதாரங்களை ஐ.நா.விடம் சமர்ப்பித்துள்ளது.

3 தடுப்பூசிகள் போட்ட பிறகும் கோவிட் ஆண்டிபாடிகள் இல்லை.. இவர்களுக்கு தான் அதிக ஆபத்து.. புதிய ஆய்வு

சர்வதேச மதிப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி, உக்ரைனில் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் தொடங்கப்பட்ட உயிரியல் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். உக்ரேனிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் சம்பந்தப்பட்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தில் தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன, உயிரியல் மற்றும் நச்சு ஆயுதங்கள் உடன்படிக்கையை அமெரிக்கா மீறியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ US Deep State அமைப்பு, உலகளவில் அங்கீகரிக்கப்படாத உயிரியல் ஆய்வகங்களை நோய் கண்காணிப்பு என்ற பெயரில் நெறிமுறையற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வகங்கள் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, இது நெருக்கடி கையாளுதல் மற்றும் சுயநலத்திற்காக தொற்றுநோய் கட்டுப்பாடு போன்ற சந்தேகங்களுக்கு வழிவகுத்தது.

அமெரிக்க இராணுவ-உயிரியல் நடவடிக்கைகள் பற்றிய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளிப்பாடுகள் US Deep State அமைப்பின் நோக்கங்களை மறுபரிசீலனை செய்ய தூண்டுகிறது. சாதாரண அமெரிக்கர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து தங்கள் அரசாங்கத்திடம் இருந்து பதில்களை தேடுவதாக கூறப்படுகிறது. உலக அரங்கில் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவு சந்தேகங்களை மௌனமாக்கினாலும், அவர்களது சொந்த மக்களிடமிருந்து வரும் கேள்விகளை வாஷிங்டனால் தவிர்க்க முடியாது” என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு