விற்பனைக்கு வந்துள்ள உலகின் மலிவான வீடு : கற்பனை கூட செய்யமுடியாத விலை!

Published : Aug 19, 2023, 09:14 AM IST
விற்பனைக்கு வந்துள்ள உலகின் மலிவான வீடு : கற்பனை கூட செய்யமுடியாத விலை!

சுருக்கம்

அமெரிக்காவில் 2 படுக்கையறை கொண்ட வீடு 1 டாலர் என்ற மலிவு விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு, சமீபத்தில் 1 டாலர் என்ற மலிவு விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. "உலகின் மலிவான வீடு" என்று அழைக்கப்படும் இந்த வீடு டெட்ராய்ட் நகருக்கு வெளியே சுமார் 30 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இந்த வீடு இரண்டு படுக்கையறைகள் மற்றும் ஒரு குளியலறையைக் கொண்டுள்ளது.

Zillow என்ற ரியல் எஸ்டேட்  நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “ அந்த வீடு 2022-ல் சுமார் 4 டாலருக்கு விற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும் “ உலகின் மலிவான இல்லத்தை அறிமுகப்படுத்துகிறோம்!' மிச்சிகனில் உள்ள போண்டியாக் நகரின் மையப்பகுதியில்! மனதைக் கவரும் 1 டாலர் என்ற விலையில் (ஆம், நீங்கள் படித்தது சரிதான்), இந்த வீடு ஒரு வீடு மட்டுமல்ல - இது வாழ்நாள் முழுவதும் ரியல் எஸ்டேட் சாகசத்திற்கான டிக்கெட்” என்று தெரிவித்துள்ளது.

நீச்சல் குளத்தில் இறந்த உடல்.. வெட்டவெளியில் உடலுறவு - தலைகீழாக மாறிய தம்பதிகளின் இன்ப சுற்றுலா!

கிறிஸ்டோபர் ஹூபல் என்ற முகவர் இதுகுறித்து பேசிய போது “ எனது வாடிக்கையாளர் உண்மையில் $1 சலுகையை ஏற்றுக்கொள்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை” என்று கூறினார். மேலும் அனைத்து ஏலங்களும் பெறப்பட்டால் வீடு $45,000 முதல் $50,000 வரை விற்கப்படும் என்று கணித்துள்ளார். 1956-ல் கட்டப்பட்ட இந்த வீட்டை மறுவடிவமைக்க சுமார் $20,000 செலவாகும் என்றும், அதேசமயம் ஒரு நிறுவனத்தை வேலைக்கு அமர்த்துவதற்கு $45,000 செலவாகும் என்றும் அவர் கூறினார்.

1 டாலர் என்ற மலிவு விலையைப் பற்றி பேசிய அவர் , "நான் பல வருடங்களாக இதைச் செய்ய விரும்பினேன். நீங்கள் அதிக விலை கொடுத்தால் தவிர, ஒரு சொத்து அதன் உண்மையான சந்தை மதிப்பைக் கண்டறியும். அதைக் காட்ட இது ஒரு வாய்ப்பு." என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!