சிங்கப்பூரின் சன்டெக் (Suntec) மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பொதுவான கழிப்பறையைக் காட்டும் புகைப்படங்களைக் கண்ட நெட்டிசன்கள் மாறுபட்ட கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
'Wikimania 2023' மாநாடு, Suntec சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் தற்காலிகமாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே ஒரு பொதுவான கழிப்பறைகளைக் குறிப்பிட்ட இடங்களில் அமைக்கும்படி கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு சில தரப்புகளில் இருந்து பாராட்டுகள் வந்தாலும், மறுபுறம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
அனைவரும் சமம் என உள்ளடக்கும் இந்த முயற்சி ஒரு நல்ல தொடக்கம் என முற்போக்குவாதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது பாதுகாப்பானதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை என மற்றொரு தரப்பினர் எதிர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் நிதிநிலைமை!- நாட்டு மக்கள் அடிப்படை விசயங்களை தெந்துகொள்வது அவசியம்! பிரதமர் லீ செயன் விளக்கம்!
மேலும் சிலர், இது போன்ற திட்டங்கள் நடப்புக்கு வருவது அதிர்ச்சியைத் தருகிறது என்றும் கூறியுள்ளனர்.
'Wikimania 2023' மாநாட்டை நடத்தும் Wikimedia நிறுவனம், சமுதாயத்தில் உள்ள சிறுபான்மை குழுக்களுக்காக குரல் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.