அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற பழமொழியை நாம் பலமுறை கேட்டிருப்போம். ஆனால் எல்லா விஷயங்களையும் பொய்யாகும் தன்மை காதலுக்கு உண்டு என்பதை நிரூபித்துள்ளது ஒரு மலேசிய பெண்ணின் வாழ்க்கை.
நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஆடம்பர வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ்ந்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் இருப்போம். நட்சத்திர ஹோட்டல்களில் உணவு, விரும்பிய ரகத்தில் சொகுசு கார்கள், நினைத்த போதெல்லாம் வெளிநாட்டுக்கு சுற்றுலா என்று இவ்வளவையும் அனுபவிக்க நம்மிடம் காசு இல்லையே என்று ஏங்கிய நாட்கள் பல இருக்கும்.
ஆனால் சுமார் 2000 கோடிக்கு மேல் குடும்ப சொத்து மதிப்பு இருந்தும், அவை அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தனது காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் மலேசியாவை சேர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் என்ற பெண்.
மலேசியாவில் பிறந்த ஏஞ்சலின் பிரான்சிஸ்ன் குடும்பம் அந்நகரத்தில் மாவசிக்கும் பெரும் செல்வந்தர்களுடைய குடும்பங்களில் ஒன்று. அவருடைய தந்தை மிகப்பெரிய தொழிலதிபர், மேலும் அவருடைய தாயோ, மலேசியா அழகியாக ஒரு காலத்தில் பட்டம் பெற்றவர்.
சிறு வயது முதலே செல்வ செழிப்போடு வளர்ந்த ஏஞ்சலின் பிரான்சிஸ் தனது பட்டப்படிப்பை படிப்பதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார், அங்கு தான் அவருடைய காதல் ஜெடையா என்பவரிடம் மீது மலர்கிறது.
ஆனால் ஜெடையா நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர், கஷ்டப்பட்டு வெளிநாடு வந்து லண்டன் நகரில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் ஒரு சாதாரண நபர். இந்த காதல் பெரிய அளவில் மலர திருமணத்தில் போய் முடிகிறது. சினிமாவில் வருவதைப் போல மாப்பிள்ளையின் பொருளாதார நிலையில் காரணம்காட்டி அவரை மணந்து கொள்ள கூடாது என்று தந்தை மறுப்பு தெரிவிக்கிறார்.
ஆனால் அந்த கட்டளைகளை எல்லாம் மீறி தன் வீட்டிலிருந்து புறப்பட்டு தன் காதலனை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்ட ஏஞ்சலினா பிரான்சிஸ் மீது அவருடைய தந்தை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய, என் தந்தை தொழிலதிபராக இருந்த காலத்தில், என் தாய் வீட்டை எவ்வாறு நிர்மாணித்தார் என்பது எனக்கு தெரியும்.
ஆகையால் எனக்கு அந்த சொத்து பெரிய விஷயம் அல்ல என் காதல் மட்டுமே எனக்கு ஒரே சொத்து என்று கூறி, தன் காதலனோடு இணைந்து தந்தைக்கு எதிராக வாதாடி விடைபெற்று சென்றிருக்கிறார் இந்த பெண். உண்மையில் காதலுக்கு இருக்கும் அந்த பலம் பணத்திற்கு இல்லை என்று சொன்னால் அது மிகையல்ல.