நடைபெற உள்ள சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்தினம், டான் கின் லியென் ஆகியோர் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளனர்.
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023 சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட 3 பேர் தகுதி பெற்றுள்ளதாக சிங்கப்பூர் தேர்தல் துறை தெரிவித்துள்ளது.
அவர்கள், GIC நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி இங் கொக் சொங் (Ng Kok Song), முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் மற்றும், NTUC Income நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியென் (Tan Kin Lian) ஆகியோர் ஆவர்.
இவர்களோடு, தேர்தலில் போட்டியிட விரும்பிய தொழிலதிபர் ஜார்ஜ் கோவுக்குத் (George Goh) தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பம் நேற்றுடன் (17 ஆகஸ்ட்) முடிவடைந்த நிலையில், மொத்தம் 6 விண்ணப்பங்களைப் பெற்றதாக தேர்தல் துறை தெரிவித்தது. அதில் இப்போது 3 பேர் மட்டும் தகுதியுடையவர்கள் என்றும் தகுதிச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக வரும் 22ம் தேதி இங் கொக் சொங், தர்மன் சண்முகரத்தினம், மற்றும் டான் கின் லியென் ஆகிய மூவரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவேண்டும். அவற்றுடன் தகுதிச் சான்றிதழ், சமூகச் சான்றிதழ், அரசியல் நன்கொடைச் சான்றிதழ் ஆகியவற்றையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.
சிங்கப்பூர்.. Girl Friendஐ வழியனுப்ப 55 வயது நபர் செய்த பலே வேலை - லபக்கென்று பிடித்து கைது செய்த போலீசார்!
ஆகஸ்ட் 22ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தினத்தன்று ஒரே ஒருவர் மட்டும் வேட்புமனுவை சமர்ப்பித்தால் போட்டியின்றி அவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவருக்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தால் செப்டம்பர் முதல் தேதி வாக்களிப்பு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைக்கப்படும் லிட்டில் இந்தியா வட்டார பகுதிகள்! - சிங்கப்பூர் நில ஆணையம் தகவல்