சிங்கப்பூர் முதலாளி மீது வழக்கு போட்ட தமிழக தொழிலாளி.. ஏன்? - தீர்ப்பு யாருக்கு சாதகமாக வந்தது தெரியுமா?

By Ansgar R  |  First Published Aug 18, 2023, 9:03 AM IST

சிங்கப்பூரில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அன்று, 12 அடி உயர லாரியின் பின்புறத்தில் இருந்து தவறி விழுந்ததில், காயம் ஏற்பட்டதால், ஒரு வெளிநாட்டுத் (தமிழக) தொழிலாளி தனது முதலாளியிடம் நஷ்டஈடு கோர முயற்சித்துள்ளார்.


கப்பல்கள், டேங்கர்கள் மற்றும் பிற கடலில் செல்லும் வாகனங்களை பழுதுபார்க்கும் Rigel Marine Services Pte Ltd என்ற நிறுவனத்திற்கு எதிராக அந்த தமிழக தொழிலாளர் அளித்த புகார் மீதான மனு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, மாவட்ட நீதிபதி டான் மே டீ முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

என்ன நடந்தது?

Latest Videos

undefined

ராமலிங்கம் முருகன் என்ற அந்த தமிழக தொழிலாளி, சிங்கப்பூரில் உள்ள அந்த ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தில் கப்பல்களுக்கு வர்ணம் பூசும் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். இந்த சூழலில் தான் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி, ராமலிங்கம் தனது தங்குமிடத்திலிருந்து 12 அடி உயர் லாரியின் பின்புறத்தில் 24 தொழிலாளர்களுடன் தாமன் ஜூரோங்கில் உள்ள 11A ஜூ யீ சாலையில் உள்ள Rigel Marine Servicesக்கு பணிக்காக அழைத்து செல்லப்பட்டார். 

ரிகல் மரைன் சர்வீசஸில், அவரும் மற்ற தொழிலாளர்களும் இறங்க, அவர்கள் வேறொரு லாரிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல தயாராக இருந்தாக அவர் தெரிவித்துள்ளார். லாரி வரும் போது பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், மழையில் நனையாமல் இருக்க, லாரிக்குள் முன்னே உள்ள இடத்தை பிடிக்க தொழிலாளர்கள் வேகமாக லாரியில் எறியதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்திய சமையல்காரர்களை அழைக்கிறது சிங்கப்பூர்! குறைந்தபட்சம் 1.2 லட்சம் சம்பளம்!

அப்போது லாரியின் பின்னே உள்ள கதவுகள் திறக்கப்படாதலால், ராமலிங்கம் தனது இரண்டு கைகளாலும் பின்னே உள்ள பலகையைப் பிடித்துக் கொண்டு, மேலே ஏற முயற்சித்துள்ளார். மழை நன்றாக பெய்த நேரத்தில், லாரியில் பின் கதவுகளும் திறக்கப்படாத நிலையில் அவர் மேல ஏறும்போது பின்னே நின்ற ஊழியர்கள் அவரை எதிர்பாராத விதமாக தள்ள, அந்த உயரமான லாரியின் மேலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார். 

இதில் காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட, காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது, உடனடியாக அருகே இருந்த ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவருக்கு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து, அவர், 2021 ஜனவரி 3 முதல் ஜூன் 2 வரை மருத்துவ விடுப்பில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ராமலிங்கம், ரிகல் மரைன் சர்வீசஸின் அலட்சியம் அல்லது அவர்களின் கடமை மீறல் தான் தனக்கு விபத்து ஏற்பட காரணம் என்று ராமலிங்கம் கூறினார். ஆனால், ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனம், ராமலிங்கத்தின் கூற்றை முற்றிலுமாக மறுத்தது, அவர் கவனிக்காமல் நடந்தது தான் அந்த விபத்துக்கு காரணம் என்று கூறியது.

மேலும், ராமலிங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவச் செலவுகள் மற்றும் ராமலிங்கத்திற்கு வழங்கப்பட்ட மருத்துவ விடுப்பு ஊதியம் குறித்தும் அந்த நிறுவனம் எடுத்துரைத்தது. ஆனால் ஒரு பணியாளரின் அனைத்து விதமான பாதுகாப்பையும் அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்கவேண்டும் என்று கூறி, தொழிலாளி ராமலிங்கத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

702 ஆண்டு சிறை... 234 பிரம்படி... 5 வருடமாக சொந்த மகள்களையே சீரழித்து வந்த தந்தை!

click me!