12 மற்றும் 15 வயதான சொந்தப் பெண் குழந்தைகளை 5 ஆண்டுகளாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு மலேசியாவில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் தனது இரண்டு மகள்களை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு 234 பிரம்படியுடன் 702 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 53 வயதான அந்த நபர், 2018 முதல் 2023 வரை 30 முறை இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவருக்கும் தற்போது வெறும் 12 மற்றும் 15 வயதுதான் ஆகிறது. ஜோகூர் மாநிலத்தில் உள்ள மூவார் என்ற இடத்தில் இரண்டு குடியிருப்புகளில் இந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதால் ஒரு மகள் கர்ப்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றங்களின் கடுமையை காரணமாக அந்தப் பெண்களின் தந்தைக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க அரசுத் தரப்பு அழுத்தம் கொடுத்தது. இது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்று அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. குற்றவாளியான தந்தை தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து குறைவான தண்டனை அளிக்க கோரிக்கை வைத்தார்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு தரப்பு வாதத்தை ஏற்று, லேசான தண்டனை வழங்கக் கோரும் குற்றவாளியின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி செய்திருக்கும் குற்றங்கள் மிகப்பெரியது என்றும் நீதிபதி கண்டித்துள்ளார்.
நீதிமன்றம் அளிக்கும் தண்டனை அந்த நபரை தனது செயல்களைப் பற்றி சிந்திக்கவும், தான் செய்த மோசமான தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் எனவும் நீதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இந்த வகையான நீண்ட சிறைத்தண்டனை கொடுப்பது மலேசிய சட்ட அமைப்பில் அசாதாரணமானது அல்ல. சமீபத்தில் இதேபோன்ற வேறொரு வழக்கில், ஜோகூரைச் சேர்ந்த ஒரு நபருக்கு 218 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 75 பிரம்படிகளும் தண்டனையாக அறிவிக்கப்பட்டன. 15 வயது மகளை மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட் என்ற இடத்தில் 38 வயதான ஒருவர் தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். குடிபோதையில் இருந்த தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக உ.பி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவரும் ரஜினி ரசிகர் தானா! குடும்பத்துடன் ஜெயிலர் படம் பார்க்கச் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ!