14 லட்சம் பேரின் அந்தரங்க தகவல்கள் லீக்! கோட்டை விட்ட சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 74,400 டாலர் அபராதம்!

By SG Balan  |  First Published Aug 17, 2023, 10:38 PM IST

சிங்கப்பூரின் ஷாப்பிங் மற்றும் பேமெண்ட் நிறுவனத்தின் 1.45 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியதால், அந்த நிறுவனத்துக்கு 74,400 டாலர் அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூரைச் சேர்ந்த ஆன்லைன் பேமெண்ட் மற்றும் ஷாப்பிங் நிறுவனமான ஷாப்பேக் தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசிய விட்டதற்காக அந்நாட்டின் தரவு தனியுரிமை கண்காணிப்பு அமைப்பு 74,400 டாலர் அபராதம் விதித்துள்ளது. இந்த டேட்டா லீக் விவகாரத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளன.

நிறுவனத்தின் வாடிக்கையாளர் டேட்டாபேஸ் 2020 இல் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்று சிங்கப்பூர் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் முகவரிகள், பெயர்கள், மொபைல் எண்கள், வங்கி கணக்கு எண்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல் ஆகியவை இதன் மூலம் லீக் ஆகியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ஹேக்கர்கள் ஷாப்பேக் நிறுவனத்தின் டேட்டாபேஸில் நுழைந்து, வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடியுள்ளனர். திருடப்பட்ட தகவல்கள் அனைத்தும் கிட்ஹப் (GitHub) தளத்தில் 15 மாதங்களுக்கு யார் வேண்டுமானாலும் கையாளும் வகையில் இருந்திருக்கிறது.

சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

ஈகாமர்ஸ் என்ப்ளெர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஷாப்பேக் நிறுவனம் பல்வேறு திட்டங்கள் மூலம் செய்யப்படும் வாங்கும் பொருட்களுக்கு கேஷ்பேக் வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளாக கூப்பன்கள் மற்றும் வவுச்சர்களையும் வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் தகவல்கள் திருடப்பட்டது பற்றி ஷாப்பேக் நிறுவனம் சார்பில் செப்டம்பர் 25, 2020 அன்று தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்களிடம் இருந்தும் இரண்டு புகார்கள் அந்த ஆணையத்திற்கு வந்தது.

சுமார் 14.5 லட்சம் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள், 840,000 பயனர் பெயர்கள், 450,000 மொபைல் எண்கள், 140,000 முகவரிகள், 10,000 தேசிய அடையாள அட்டை எண்கள் மற்றும் 300,000 வங்கி கணக்கு எண்கள் ஆகியவை கசிந்துள்ளன. இத்துடன் சுமார் 3.8 லட்சம் பயனர்களின் சில கிரெடிட் கார்டு தகவல்களும் திருடப்பட்டுள்ளன. கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியின் பெயர், கிரெடிட் கார்டு எண்கள், காலாவதியாகும் மாதம் மற்றும் ஆண்டு ஆகியவை அதில் அடங்கும்.

மொபைல் பயனர்களின் பாதுகாப்புக்கு 2 புதிய சீர்திருத்தங்கள்! KYC, (PoS) முறைகளில் மாற்றம்!

click me!