இந்திய சமையல்காரர்களை அழைக்கிறது சிங்கப்பூர்! குறைந்தபட்சம் 1.2 லட்சம் சம்பளம்!

By Dinesh TG  |  First Published Aug 17, 2023, 6:31 PM IST

சிங்கப்பூர் நாட்டில் உள்ள இந்திய உணவகங்கள் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து சமையல்காரர்களை பணியில் அமர்த்தலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 


சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்களில், இந்திய சமையல் கலைஞர்களை பணிக்கு அமர்த்த அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக செப்டம்பர் 1ம் தேதி முதல் அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்ற சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், சில விதிமுறைகளையும் சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. அதாவது, ஓர் உணவகத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 8 சதவீதம் பேர் மட்டுமே புதிய திட்டத்தின்கீழ் பணிக்கு அமர்த்தலாம் என்றும், அவர்களுக்குக் குறைந்தபட்சமாக மாதம் 2000 வெள்ளி (ரூ.1.2 லட்சம்) சம்பளம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவால் வணிகம் விருத்தியடையும் என இந்திய உணவகச் சங்கத்தின் கௌரவச் செயலாளர் ச.மகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளூரில் சமையல்காரர்கள் கிடைப்பது அறிது எனத் தெரிவித்த அவர், முன்பிருந்த ஒதுக்கீட்டு முறையால் இந்திய சமையல் கலைஞர்களை வரவழைப்பதும் கடினம் என்றார். ஆனால், தற்போதைய அரசின் அறிவிப்பால் இந்தியாவிலிருந்து சமையல் தெரிந்த கலைஞர்களை எளிதில் வரவழைக்கலாம் என்றார்.



சமையல்காரர்கள் தட்டுப்பாட்டால் பரிமாறும் உணவு வகைகளில் சிலவற்றை குறைத்ததாகவும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுக்கும் வியாபாரத்தைக் குறைத்துக் கொண்டதாகவும் பல உணவகங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அரசின் இந்த புதிய வழிமுறை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என உணவகங்கள் தெரிவித்துள்ளன.

Latest Videos

undefined

மறுசீரமைக்கப்படும் லிட்டில் இந்தியா வட்டார பகுதிகள்! - சிங்கப்பூர் நில ஆணையம் தகவல்

சிங்கப்பூரில் உள்ள உணவகங்கள் ஏற்கெனவே மலேசியா, சீனா, மேற்காசிய நாடுகளில் இருந்து சமையல்காரர்களை வரவழைக்க ஏற்கனவே நடைமுறைகள் உள்ளது. தற்போது, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாட்டு சமையல் கலைஞர்களையும் வரவழைக்க அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பல இன உணவுக் கலாசாரத்தை ஊக்குவிக்கவும், இந்தியக் கலாசாரத்தை மேலும் வலுப்படுத்தவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் இனி செப்டம்பர் 25 முதல் திருமணத்தை இணைய வழி பதிவு செய்யலாம்!

click me!