நீச்சல் குளத்தில் இறந்த உடல்.. வெட்டவெளியில் உடலுறவு - தலைகீழாக மாறிய தம்பதிகளின் இன்ப சுற்றுலா!

தங்களுக்கு என்று சில நேரத்தை மகிழ்ச்சியாக கழித்திட நாம் செல்லுகின்ற சுற்றுலா வெகு சில சமயங்களில் நாம் எதிர்பார்த்ததை போல நடப்பதில்லை. அதேபோல இன்ப சுற்றுலாவுக்கு சென்று ஒரு தம்பதிகளுக்கு அங்கு கிடைத்த அனுபவம் திகில் ஊட்டும் விதமாக இருந்துள்ளது.

UK Couples Caribbean Holiday went worse after they found pool sex and dead body in hotel

ஒரு தம்பதியினர் கரீபியன் தீவுகளுக்கு தங்கள் விடுமுறை கொண்டாட சென்றுள்ளனர், ஆனால் அவர்கள் தங்கிய அந்த ஹோட்டலில் நடந்த சில சம்பவங்கள் அவர்களுடைய நிம்மதியை முற்றிலும் குழைத்து, அந்த விடுமுறையை கொடுமையான ஒன்றாக மாற்றியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஹல் என்ற இடத்தில் இருந்து ஆலன் மற்றும் சாரா ஸ்டீவன்ஸ் என்ற தம்பதியினர் கடந்த ஜூன் மாதம் டொமினிகன் குடியரசுக்கு தங்கள் விடுமுறையை கழிக்க சென்றுள்ளனர். ஸ்டீவன்ஸ் அளித்த தகவலின்படி அவர்கள் சுமார் 2,800 பவுண்ட் ($3569) மதிப்புள்ள ஹோட்டலில் தங்கியது ஒரு நகரமாக மாறியது என்றும். மேலும் அவர்கள் சென்ற சுற்றுலா ஆபரேட்டர் அவர்களுக்கு இழப்பீடாக 200 பவுண்ட் ($254) மட்டுமே வழங்கியதாகவும் கூறியுள்ளார். 

என்ன நடந்தது?

சுற்றுலாவை கொண்டாட லண்டனில் இருந்து அந்த ஜோடி புறப்பட்டு, சம்பவம் நடந்த அந்த கரீபியன் தீவுகளில் உள்ள ஹோட்டலுக்கு வந்து சேர்த்துள்ளனர். முதலில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையும், உணவும் மிகச் சிறந்த வகையில் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அது அவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்ததாகவும் அவர்கள் கூறினர். 

வெயில் தாங்க முடியல: ஜப்பான் காரன் கண்டுபிடித்த கூலிங் ட்ரெஸ்!

ஆனால் அதன் பிறகு தான் அவர்களுடைய சுற்றுலா கொஞ்சம் கொஞ்சமாக மோசம் அடைய துவங்கி உள்ளது. அவர்கள் குளிப்பதற்காக நீச்சல் குளத்தை நோக்கி சென்றுபோது தான் அங்கு ஒரே புகை மண்டலமாக, போதைப் பொருட்களை ஆங்காங்கே உட்காந்து அங்கு வந்திருந்த சில பிரயாணிகள் புகைபிடித்து கொண்டிருந்ததாகவும், ஒரு சில இடங்களில் வெட்ட வெளியில் சிலர் உடலுறவு கொண்டு இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

இது தங்கள் சுற்றுலாவை இனிமையாக கழிக்க வந்த அவர்களுக்கு அருவருப்பையும், சங்கடத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது அனைத்தையும் தாண்டி அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்ற பொழுது, இருவர் இறந்து கிடப்பதையும் கண்டு அதிர்ந்துள்ளனர். அவர்கள் அதிகமாக போதை பொருள் உட்கொண்டதால் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

இது குறித்து இந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கூறிய பொழுது, "மனிதர்கள் தினமும் இரக்கத் தான் செய்கிறார்கள், அதற்காக என்ன செய்ய முடியும்?" என்று அவர்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இறுதியாக இவ்வளவு தலைவலிகளை தாங்கிய பிறகு அவர்கள் தங்கள் சுற்றுலாவை பதிவு செய்த TUI என்ற நிறுவனம் அவர்களுக்கு வேறு ஒரு ஹோட்டல் தருவதாக கூறியதாகவும், ஆனால் அது இவர்கள் கொடுத்த பணத்திற்கு ஈடான ஹோட்டல் இல்லை என்றும் கூறப்படுகிறது. 

இறுதியாக அவர்கள் சுமார் 17 நாட்களை வசதிகள் பெரிதும் இல்லாத அந்த சிறிய ஓட்டலில் கழித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பேசிய ஸ்டீபன், தான் நீண்டகால TUI கஸ்டமர் என்றும், சுமார் 25 ஆண்டுகளாக பல்லாயிரம் பவுண்டுகளை அந்த நிறுவனத்தில் சுற்றுலாவிற்காக செலவழித்து இருப்பதாகவும் கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இறுதியாக அவருக்கு இழப்பீடாக வெறும் 200 பவுண்ட் அளிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிப்பறையா? அலறும் நெட்டிசன்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios