சிங்கப்பூர் இந்தோனேசியா நாடுகளிடையே நெட்ஸ் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் வழியாக ஸ்மார்ட்போன் மூலம் கியூஆர் குறியீடு பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
சிங்கப்பூர் - இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே பணப் பரிவர்த்தனை தொடர்பை மேம்படுத்தும் பணி கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்தப் பணி கிட்டத்தட்ட பாதியளவு முடிவடைந்துள்ளதாக தவகல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனைகள் ஏற்பு முறை சோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பரிசோதனை முறையில் இருநாட்டு மக்களிடையே குறிப்பிட்ட பயன்பாட்டாளகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, நடப்பு ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளுக்கிடையேயான பணப்பரிவர்தனையை அமல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது,” என்று இந்தோனேசியாவின் ‘ஃபிலாங்சி ஹென்டார்ட்டா’ நிறுவனத்தின் துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்
இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த நெட்ஸ் சேவையின் செய்தி தொடர்பாளர், இந்தோனேசியாவின் ‘குவிக் ரெஸ்பான்ஸ் கோட் இந்தோனேசியா ஸ்டாண்டர்ட்’ செயலியும் நெட்ஸ் முறை எல்லை தாண்டிய QR Code பணப் பரிவர்த்தனை இணைப்பும் தற்பொழுது செயல் நிலையில் உள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்ஆர்.
சிங்கப்பூர் வானில், மேகமூட்டத்தின் நடுவே பிரகாசமாக தோன்றி பெருமுழு நிலவு!
“தொழிற்துறை ஒத்துழைப்புடன் உள்ளூர் வர்த்தகர்களுக்கு வசதி செய்து தருவதுடன் சிங்கப்பூர் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் கூடுதல் வாய்ப்புகளை இது வழங்கும்,” என நெட்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த செயல்முறை நடைமுறைக்கு வருவதன் மூலம், சிங்கப்பூரிலிருந்து இந்தோனேசியா செல்வோர் அங்கு தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு QR code மூலம் கட்டணம் செலுத்தலாம்.