பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூருக்கு உதவ அதிக அளவிலான வெளிநாட்டு சுகாதார பணியாளர்களுக்கு PR வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசின் PR எனப்படும் Permanent Residence உரிமையை, வருடம் தோறும் சுமார் 1200 வெளிநாட்டு சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யி குங் தெரிவித்துள்ளார்.
Permanent Residence என்பது ஒரு நாடு, பிற நாட்டில் இருந்து வரும் பணியாளர்களுக்கு அவர்களது நாட்டில் நிரந்தரமாக தங்க வழங்கும் ஒரு அனுமதி.
undefined
இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் வானில், மேகமூட்டத்தின் நடுவே பிரகாசமாக தோன்றி பெருமுழு நிலவு!
சிங்கப்பூர் நாடாளுமன்ற அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ஓங் இந்த புள்ளிவிவரத்தை அளித்தார். இந்த புள்ளிவிவரத்தின்படி, PR பெரும் வெளிநாட்டு சுகாதார பணியாளர்களில் 10ல் 6 பேர் செவிலியர்கள் என்றும், மீதமுள்ளவர்கள் மருத்துவர்கள், மற்றும் இதர சுகாதார பணியாளர்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த ஆண்டில் அதிகமான அளவில் வெளிநாட்டு செவிலியர்களுக்கு PR அந்தஸ்து வழங்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அவர்கள் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காவும், சிங்கப்பூரின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளை புரிதிசெய்யவும் இவ்வாறு செய்யப்பட்டு வருகின்றது என்றும், அமைச்சர் ஓங் கூறினார்.
"வெளிநாட்டு சுகாதாரப் பணியாளர்கள், சிங்கப்பூரின் சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்று கூறிய அவர்", எங்கள் சுகாதாரமான சமூக அமைப்பில் மதிப்புமிக்க உறுப்பினர்களாக மாறி, சிங்கப்பூர் நாட்டுக்கு தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு, நாங்கள் PR அந்தஸ்தை வழங்க தயாராக இருக்கிறோம்" என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள் : பல நாட்களாக தூங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள்.. ஒளிந்திருக்கும் மர்மம்!