கஜகஸ்தானின் 2 கிராமங்களில் வசிக்கும் மக்கள் நீண்ட நாட்களாக தூங்குவதாக கூறப்படுகிறது.
புகழ்பெற்ற எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் எழுதிய Rip Van Winkle என்ற புத்தகத்தில், 20 வருடங்கள் தொடர்ந்து தூங்கிய ஒரு மனிதனின் வித்தியாசமான உலகத்தை பற்றி கூறப்பட்டிருக்கும். இந்தப் படைப்பு கற்பனையானது என்றாலும், உண்மையிலேயே சாமானிய மக்கள் பல நாட்களாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். கஜகஸ்தானில் உள்ள கலாச்சி மற்றும் கிராஸ்னோகோர்ஸ்க் கிராமங்களில் உள்ள மக்கள் தூங்கினால் நீண்ட நாட்களாக எழுந்திருக்க மாட்டார்களாம். மேலும் அவர்கள் தூங்கி எழுந்தவுடன், தற்காலிக நினைவாற்றல் இழப்பு, பலவீனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
60 ஆண்டுகளாக தூங்காத 80 வயது முதியவர்.. மருத்துவர்களால் கூட காரணத்தை கண்டறிய முடியவில்லை!
2013 ஆம் ஆண்டில், இந்த இரண்டு கிராமங்களில் 140 க்கும் மேற்பட்ட மக்கள், வேலையின் நடுவில் தூங்கிவிட்டார்கள், சிலர் தொடர்ந்து ஒரு வாரமாக எழுந்திருக்கவில்லை. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையுமே இந்த நோய் பாதிக்கும். இந்த நோயின் காரணமாக குழந்தைகள் பள்ளியில் தூங்குவார்களாம். இந்த நீண்ட தூக்கத்தில் கண்ட கனவுகள் குறித்து சில குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
Rudolf Boyarinos மற்றும் Misha Plyukhin என்ற இரண்டு உள்ளூர் குழந்தைகள், சிறகுகள் கொண்ட குதிரைகள், படுக்கைகளில் பாம்புகள் மற்றும் புழுக்கள் தங்கள் கைகளை விழுங்குவதை உள்ளூர் செய்தித்தாள் Komsomolskaya Pravda பார்த்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் இதற்கு ஒரு பகுத்தறிவு விளக்கம் உள்ளது, சில ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பின்னர் கைவிடப்பட்ட யுரேனியம் சுரங்கங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.. 2015 ஆம் ஆண்டில், கஜகஸ்தானின் அப்போதைய துணைப் பிரதமரான மறைந்த பெர்டிபெக் சபர்பேவ், யுரேனியம் சுரங்கங்கள் இந்த பிரச்சினையின் மூலக்காரணம் என்பதை உறுதிப்படுத்தினார்.
அனைத்து மக்களின் மருத்துவ பரிசோதனைகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த பின்னர், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன்களின் உயர்ந்த அளவுகளால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். 2015 ஆம் ஆண்டு முதல், கலாச்சி மற்றும் கிராஸ்னோகோர்ஸ்க் கிராமங்களில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகள் கஜகஸ்தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஒரே ஆண் நதி இதுதான்.. அதன் சிறப்புகள் என்ன? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..