என் குடும்பத்தை விட்டுருங்க... முறைகேடு குற்றச்சாட்டை மறுக்கும் சிங்கப்பூர் அமைச்சர்

By SG Balan  |  First Published Jul 4, 2023, 11:40 AM IST

அரசு ஒப்பந்தங்கள் தனது மகனுக்கு வழங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அமைச்சர் சண்முகம், தனது குடும்பத்தை விட்டுவிடுமாறு கோரியுள்ளார்.


சிங்கப்பூரில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கே. சண்முகம் வாடகைக்கு எடுத்த பங்களாவை புதுப்பிக்க தனது மகனுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் அவரை விமர்சிக்கும் நபர்களிடம் தனது குடும்பத்தை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சண்முகம், தனக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனுக்கும் ரிடவுட் ரோட்டில் உள்ள இரண்டு பங்களாக்களை வாடகைக்கு விடுவது குறித்த விவாதத்தில் நதியா சம்டின் எழுப்பிய கேட்ட கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

சான் பிரான்சிஸ்கோவில் இந்தியத் தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்; அமெரிக்கா கடும் கண்டனம்

26 ரிடவுட் சாலையில் உள்ள பங்களாவை சண்முகத்திற்கு வாடகைக்கு விடப்படுவதற்கு முன்பு, சிங்கப்பூர் நில ஆணையம் (SLA) 5,15,400 டாலர் செலவில் புதுப்பிப்புப் பணிகளைச் செய்தது. இதேபோல விவியன் பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட 31 ரிடவுட் சாலைக்கு 5,70,500 டாலர் செலவிடப்பட்டுள்ளது.

பப்ஜி காதலனைத் தேடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்த இரண்டு பங்களாக்களுக்கான ஆயத்தப் பணிகளுக்கு நில ஆணையம் ஒப்பந்தங்களை எவ்வாறு வழங்குகிறது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நதியா கேட்டிருந்தார். அமைச்சர் சண்முகத்தின் மகன் ரவீந்திரன் சண்முகம் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் லிவ்ஸ்பேஸ் நிறுவனத்திற்கு வீடுகளை புதுப்பிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது எப்படி என்ற குற்றச்சாட்டை அமைச்சர் மறுக்க முடியுமா என்றும் அவர் கேட்டார்.

இதற்கு பதில் கூறிய சண்முகம், “தங்கள் நிறுவனம் நில ஆணையத்துடன் எந்த ஒப்பந்தத்தையும் போடவில்லை; ரிடவுட் சாலை பங்களாக்களில் அவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை என்று என் மகன் கூறுகிறார். நீங்கள் இந்த முற்றிலும் தவறான மற்றும் அவதூறான தகவலைச் சொல்கிறீர்கள். இது உண்மையாக இருந்தால் CPIB இதைக் கண்டுபிடித்திருக்காது என்று இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்களா?" என்று தெரிவித்தார்.

"நான் என்னை தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவன். நான் என்னை தற்காத்துக் கொள்வேன். ஆனால் என் குடும்பத்தை விட்டு விடுங்கள்” என்றும் சண்முகம் கூறினார்.

பிரதமர் மோடி தலைமையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் பங்கேற்பு

click me!