உருமாறி வரும் கொரோனா வைரஸ்க்கு புதிய தடுப்பு ஊசி மருந்துகள் செலுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் பரவிய இந்த வைரஸ் அடுத்தடுத்த வாரங்களில் உலகநாடுகளில் எல்லாம் பரவியது. இந்த பெருந்தொற்றை கடுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து நின்றன. உலகலாளவிய பொது முடக்கம் அமல்படுத்தி தொற்று பரவலின் வேகத்தை ஓரளவு உலக நாடுகள் கட்டுப்படுத்தினாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனம்
அதன்பிறகு தடுப்பூசிகள் வந்த பிறகே தொற்று பரவலின் தீவிரம் குறைந்தது. தற்போது வைரஸ் பெருந்தொற்று உலக அளவில் பெரும்பாலும் கட்டுக்குள் வந்து விட்டது. மக்களும் இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டனர். உலக சுகாதார அமைப்பும் கொரோனா அவசர நிலை அறிவிப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. எனினும், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்றும் உலக சுகாதர அமைப்பு எச்சரித்துள்ளது. இதனிடையே, ஏப்ரல் முதல் ஓமிக்ரான் மாறுபாடு XBB கோவிட் வேரியன்ட் வைரஸ் பரவி வருகிறது.
Refresh Pod | சிங்கப்பூர் விமானநிலையத்தில் கொளுத்தும் வெயில்! - ஊழியர்கள் இளைப்பாற புது வசதி!
இந்நிலையில், உருமாறி வரும் கோவிட் வைரஸ்களுக்கு புதிய தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர், அந்நாட்டு நாடாளுமன்ற அவையில் பதில் அளித்துள்ளார்.
அதில், ஓமைக்ரான் வைரஸ் வகைக்கு எதிரான இரு திறன் கொண்ட mRNA தடுப்புமருந்தே இப்போதைக்கு இருக்கும் புதிய தடுப்பு மருந்து எனச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய தடுப்பூசித் திட்டத்தில் mRNA தடுப்புமருந்துகளே வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவிதார்.
ஐரோப்பா நாடுகளுக்கு போறீங்களா? இந்த படிவத்தை நிரப்புங்க! சிங்கப்பூர்காரர்களுக்கு புதிய விதிமுறை!
புதிய தடுப்புமருந்துகள் வெளியிடப்படும்போது அவற்றைச் சுகாதார அமைச்சகம் உரிய ஆய்வு செய்து, பின்னர் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை: 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!