மியான்மர் ராணுவத்திற்கு உதவும் சிங்கப்பூர் நிறுவனங்கள்! - விசாரணைக்கு உத்தரவிட்ட வெளியுறவுத்துறை!

By Dinesh TG  |  First Published Jul 4, 2023, 1:51 PM IST

சிங்கப்பூரை சேர்ந்த 91 நிறுவனங்கள், மியான்மர் ராணுவத்திற்கு பொருட்களை அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணைகள் நடந்து வரும் நிலையில், மியான்மருடன் "சட்டப்பூர்வ வர்த்தகத்தை" தடுக்கும் எண்ணம் சிங்கப்பூருக்கு இல்லை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
மியான்மர் நாட்டு இராணுவத்திற்கு பொருட்களை விநியோகம் செய்வதில் சிங்கப்பூரைச் சேர்ந்த மேலும் 91 நிறுவனங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, சிங்கப்பூர் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) விக்ரம் நாயர் (மக்கள் செயல் கட்சி-அட்மிரால்டி) மற்றும் டென்னிஸ் டான் (தொழிலாளர் கட்சி-ஹூகாங்) ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிறுவனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரித்ததா என்றும், ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்றும் நாடாளுமன்ற எம்ப நாயர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த வங்கிகள் பரிவர்த்தனைகள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன, அத்தகைய வங்கிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என டென்னிஸ் டான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொந்த வீட்டை விட்டு சொகுசு பங்களாவில் வாடகைக்கு குடியேறிய அமைச்சர்! சிங்கப்பூர் அமைச்சரவையில் விளக்கம்!

அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்துள்ள வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், குறிப்பட்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும், மியான்மர் நாட்டின் மீது பொது வர்த்தகத் தடை விதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

Tap to resize

Latest Videos

உருமாறிய கொரோனா வைரஸ்க்கு! புதிய தடுப்பு மருந்தா! சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

click me!