பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அதை சமாளிக்க தீர்க்கமான நடவடிக்கை தேவை என்று பிரதமர் மோடி இன்று நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் காணொளி மூலம் வலியுறுத்தினார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று காணொளி மூலம் நடந்து வருகிறது. மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பிரதமர் கோடி பேசுகையில், ''பயங்கரவாதம் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்படையாக இருந்தாலும் நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். எஸ்சிஓவின் தலைவராக, நமது பன்முக ஒத்துழைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
undefined
நாங்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை வெளியில் இருந்து ஒரு நீட்டிக்கப்பட்ட அமைப்பாக பார்க்கவில்லை. மாறாக ஒரு கூட்டு குடும்பமாக பார்க்கிறோம். பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த அமைப்புக்கான தூண்களாக பார்க்கிறோம். எஸ்சிஓ அமைதி, செழிப்பு, மற்றும் யூரேசியாவின் வளர்ச்சிக்கான முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது.
Addressing the SCO Summit. https://t.co/oO9B1nnXer
— Narendra Modi (@narendramodi)இந்த அமைப்பில் ஈரான் சேர்ந்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை கண்டிப்பதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயக்கம் காட்டக் கூடாது. ஆப்கன் மக்களின் நலனுக்கு ஷாங்காய் அமைப்பு உதவ வேண்டும். மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும். அண்டை நாடுகளை சீர்குலைக்க ஆப்கன் மண்ணை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் யூரேசியாவுடன் பகிரப்பட்ட பாரம்பரிய உறவுகளே சாட்சி'' என்றார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசுகையில், ''மேற்கத்திய தடைகள் மற்றும் தூண்டல்களுக்கு எதிராக ரஷ்யா எழுந்து நிற்கும். எஸ்சிஓ அமைப்பு நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்ள ரஷ்ய திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்கள் பயன்படுத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் ஆபத்து அதிகரித்து வருகிறது'' என்றார்.
கடந்த வாரம் ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக கூலிப்படையான வாக்னர் படை களத்தில் இறங்கி போரிட்டது. இது அதிபர் விளாடிமிர் புடினுக்கு பெரிய அளவில் அதிகார அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது. இதில் சுமூக நிலை எட்டிய பின்னர் முதன் முறையாக காணொளியில் தோன்றி எஸ்சிஓ மாநாட்டில் பேசினார் புடின்.
மேலும், இந்த மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ''பிராந்தியத்தில் அமைதி நிலவுவதற்கு ரஷ்யா, ஈரான் என அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். பொதுவான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். சரியான பாதையை தேர்வு செய்து இறையாண்மை, ஒருமித்த நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.