செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகியது பாகிஸ்தான்... காரணம் என்னானு தெரியுமா?

By Narendran SFirst Published Jul 28, 2022, 5:43 PM IST
Highlights

சென்னையில் தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது. 

சென்னையில் தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது. 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில், நடைபெறுகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த போட்டிக்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாய் ஒளிரும் அரங்கம்

இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிக சிறப்பாக செய்துள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள பிரமாண்ட தொடக்க விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில், சென்னையில் தொடங்க உள்ள 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: செஸ் திருவிழாவில் வித,விதமான 3500க்கும் மேற்பட்ட உணவுகள்.! வீரர்களை அசரவைக்கும் தமிழக அரசு...உணவு பட்டியல் இதோ

ஜூலை 21 அன்று காஷ்மீர் வழியாக இந்தியா நடத்திய ஜோதி ஓட்டத்தை வாபஸ் பெற்றதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுத் தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் அசிம் இப்திகார் ரேடியோ பாகிஸ்தானுக்கு அளித்த அறிக்கையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நடத்தும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ஏற்கனவே ஒரு பாகிஸ்தானியக் குழு பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வை அரசியலாக்க இந்தியா தேர்வு செய்துள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!