facebook: meta: முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு

By Pothy Raj  |  First Published Jul 28, 2022, 11:53 AM IST

ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா முதன் முதல் கடந்த 2வது காலண்டில் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. 


ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா முதன் முதல் கடந்த 2வது காலண்டில் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. 

கடும் போட்டியாளராக இருக்கும் சீனாவின் டிக்டாக் போட்டி அதிகரிப்பு, விளம்பரவருமானம் குறைவு போன்றவற்றால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மெட்டாவின் வருவாய் குறைந்தது என்ற செய்தி வெளியானதும், மெட்டாவின் பங்கு மதிப்பும் ஒரு சதவீதம் சரிந்தது

Tap to resize

Latest Videos

us fed meeting today: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை தொடர்ந்து 2-வதுமுறையாக 75 புள்ளிகள் உயர்த்தியது

ஜூன்மாதம் முடிந்த 2-வது காலாண்டில், மெட்டாவின் வருவாய் 280.82 கோடி டாலர் குறைந்துள்ளது. டிஜிட்டல் விளம்பரச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, ஸ்நாப், அல்பாபெட், டிக்டாக் ஆகியவற்றின் கடும் போட்டி ஆகியவற்றால் வருவாய் குறைந்தது. 

பேஸ்புக் மெட்டாவின் வருவாய் 2-வது காலாண்டில் 36 சதவீதம் சரிந்து, 670 கோடி டாலராகக் குறைந்தது. நிறுவனத்தின் ஒட்டுமொத்தச் செலவு 22 சதவீதம் அதிகரித்து, 2005 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

தேவைக் குறைவு, விளம்பர வருவாய் குறைவுதான் வருவாய் குறைவுக்குக் காரணம். இதைநிலைதான் 3வது காலாண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். 3வது காலாண்டில் 2600 முதல் 2850 கோடி டாலருக்குள் வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் கூறுகையில் “பொருளாதார மந்தநிலைக்குள் இருக்கிறோம். அதனால்தான் விளம்பர வருவாயில் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

இருப்பினும், இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிடப்படும் ரீல்ஸ் குறுகிய வீடியோ மூலம் டிக்டாக்குடன் போட்டியிட முடிகிறது. இதனால் வருவாயும், 100 கோடி டாலர் வருகிறது. இருப்பினும் எதிர்பார்ப்பைவிட பேஸ்புக் பயனர்களின் மாதச் சராசரி சற்றுக் குறைந்துள்ளது. மெட்டா மட்டுமல்ல அதன்போட்டியாளர்களும் சரிவு ஏற்பட்டுள்ளதை உணர்கிறார்கள்.

இலங்கை முன்னாள்அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்

ஸ்னாப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இலக்குகளை அடையமுடியவில்லை. விளம்பரச்சந்தை எப்போதும் இல்லாத அளவு சுணக்கமாக இருப்பது, விற்பனை குறைந்துள்ளதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

ஆனால், கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட் தனது 2-வது காலாண்டு வருவாய் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இஸ்டாகிராமில் கன்டென்ட்கள் 15 சதவீதம் செயற்கை நுண்ணறிவு மூலம்தான் பரிந்துரைக்கப்படுகின்றன, இது 2023ம் ஆண்டில் இரு மடங்காக உயர்த்தப்படும் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூஹர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சொந்த வீட்டை விற்கும் மார்க் ஜூர்க்கர்பெர்க்.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா? வாயை பிளந்த நெட்டிசன்கள் !

பேஸ்புக் நிறுவனம் எதிர்காலத்தில் லாபம் அளி்க்கக்கூடிய மெட்டாவெர்ஸில் அதிகமான ஆர்வத்தை செலுத்துகிறது, அதிகமான முதலீட்டையும் செலுத்தி வருகிறது. மெட்டாவெர்ஸ் என்பது, நம்முடைய வாழ்க்கையின் கடந்த காலத்தை 3டி மூலம் கொண்டுவருவதாகும், மெய்நிகர் சுற்றுச்சூழல். திரையில் பார்ப்பதைவிட நம்மால் உணர முடியும்


 

click me!