கூகுளில் எப்படியாவது வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவை, கனவாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், லட்சியத்தை அடைவதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் கோஹன் முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
கூகுளில் எப்படியாவது வேலைக்கு சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவை, கனவாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், லட்சியத்தை அடைவதற்கு அமெரிக்காவைச் சேர்ந்த டைலர் கோஹன் முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். கஜினி முகம்மது 18 முறை படையெடுத்தார் என்று கூறுவது உண்டு. ஆனால், இவரோ 39வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வருபவர் டைலர் கோஹன். இவர் கூகுளில் வேலை கிடைப்பதற்கு முன்பு வரை ஸ்ட்ரடஜி அண்டு ஓப்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கூகுளில் பணியாற்றுவதை தனது லட்சியமாக, கனவாக வைத்துக் கொண்டுள்ளார். 38 முறை முயற்சித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தோல்விதான். விண்ணப்பம் செய்ததற்கு நன்றி என்ற பதில் மட்டும் கிடைத்துள்ளது. கடந்த 19ஆம் தேதி, 39வது முயற்சியில் வெற்றி கிடைத்துள்ளது. இதை தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
undefined
facebook: meta: முதன்முதலாக வருவாய் இழப்பைச் சந்தித்த மெட்டா(meta): 280 கோடி டாலர் சரிவு
தனது சமூக வலைத்தளம் பக்கத்தில், ''முயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்துக்கும் இடையே இடைவெளி உள்ளது. இதில் எது நான், எந்த வகையைச் சேர்ந்தவன் என்பது குறித்து முடிவு எடுக்க முயற்சித்து வருகிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.
சமூக வலைதள பதிவுக்கு என்று #acceptedoffer, #application என்ற இரண்டு ஹேஸ்டேக்குகளை உருவாக்கியுள்ளார். இவரது பதிவை இதுவரை 35,000 பேர் லைக் செய்துள்ளனர். ஆகஸ்ட் 25, 2019ஆம் ஆண்டில் தனது முதல் முயற்சியை துவக்கியுள்ளார். தொடர்ந்து இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 39வது முறையாக, நடப்பாண்டில் கடந்த 19ஆம் தேதி, விண்ணப்பித்தபோது, இவரது விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு முறை முயற்சித்தார் என்பதற்கான ஆதாரத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார் கோஹன்.
இவரது பதிவக்கு பதில் அளித்து இருக்கும் பலரும் அமேசானில் நானும் 120க்கும் அதிகமான முறை நிராகரிக்கப்பட்டு இறுதியில் வேலை வாய்ப்பு கிடைத்தது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் நான் 83 முறை விண்ணப்பித்ததில், 52 முறை நிராகரிக்கப்பட்டு, பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.