பீதியில் உறைந்து போன பாகிஸ்தான் – ராணுவ அதிகாரிகளுக்கு நவாஸ் செரீப் எச்சரிக்கை

First Published Oct 7, 2016, 6:25 AM IST
Highlights


உலக நாடுகள் இந்திய-பாகிஸ்தான் எல்லை பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து வருகின்றன. இதில் பாகிஸ்தான் எல்லை மீறி நடந்து வருவதை உலகின் பல நாடுகள் கவனித்து வருவதுடன் பாகிஸ்தான் அத்துமீறி நடந்துகொள்வதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

பதான்கோட் தாக்குதலை போல பல தாக்குதல்களை பொறுத்து கொண்டு பதிலுக்கு தாக்குதல் நடத்தாமல் இந்தியா பொறுமை காத்தது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர்இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உரி தாக்குதலில் இந்தியா பொறுமை இழந்து எதிர் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலை பாகிஸ்தான் கண்டித்து வருகிறது. சீறி எழுந்த இந்தியா ஒரே சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை கொன்றதுடன், 8க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்த்தது.

தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் திரும்பியுள்ளது.பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டுகின்றன. பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும் நிலை உருவாகி உள்ளது. சார்க் நாடுகள், அரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் தற்போது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சீனாவும், நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானை சுற்றி உள்ள நாடுகள் கூட அதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேலாவது பாகிஸ்தான் தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால், சர்வதேச சமூகத்தில் இருந்து தனித்துவிடப்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் அச்சம் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்  தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் அல்லது  தனிமையை சந்தியுங்கள் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சர்வதேச  நாடுகள் பாகிஸ்தானை தனிமை படுத்துவதில் இருந்து தப்பிக்க பிரதமர் நவாஸ் செரீப் பல் வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இதில் முக்கியமாக சமீபத்தில் 2 கட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.

உளவு அமைப்பான ஐஎஸ்ஐ டைரக்டர் ஜெனரல் ஜெனரல் ரிஸ்வான் அக்தர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  நசீர் ஜன்ஜூ ஆகியோர்  4 மாகாணங்களுக்கும்  பயணம் மேற்கொண்டு மாகாண உச்ச குழுக்கள் மற்றும் ஐஎஸ்ஐ துறை தளபதிகளிடம் இத்தகைய தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!