சிங்கப்பூர் அரசுக்கு சொந்தமான சொத்துகளில் கூடுதலானவைகளை, அடுத்தடுத்த மாதங்களில் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளாக (Co living space) மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூரில், உறவினர்கள் அல்லாத அல்லது தங்களுக்கிடையே தொடர்பில்லாத சிலர் ஒன்றாக சேர்ந்து வாழும் பகுதிகளே கூட்டுக் குடியிருப்புப் பகுதிகள் என்ற அழைக்கப்படுகின்றன. இதற்காக இந்தியர்கள் அதிகம் வசிக்கும், லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள கட்டடத்தை மறுசீரமைக்க சிங்கப்பூர் நில ஆணையம் கடந்த புதன் கிழமை டெண்டர் விட்டுள்ளது.
எண் 79 - 95, இந்து சாலையில் அமைந்திருக்கும் இரண்டு மாடிக் கட்டடத்துக்கான டெண்டரை, எக்கோ-எனர்ஜி எனும் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளை நிர்வகித்து செய்துதரும் ‘கோவ் லிவிங்’ எனும் நிறுவனத்துடன் எக்கோ-எனர்ஜி இணைந்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டடத்தின் பரப்பளவு சுமார் 1,700 சதுர மீட்டர். முதன்முறையாகக் கூட்டுக் குடியிருப்புப் பகுதியாகப் மாற்றப்பட இருக்கும் அரசுக்கு சொந்தமான இடம் இதுதான்.
சிங்கப்பூரில், சமூகத்தில் கூட்டுக் குடியிருப்புப் பகுதிகளுக்கான தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதற்கேற்றவாறு கூடுதலான அரசு சொத்துகள் அவற்றுக்கென ஒதுக்கப்படுகின்றன. இந்து சாலையில் உள்ள கட்டடத்துக்கான டெண்டரைப் பெற 16 நிறுவனங்கள் போட்டி போட்டதாக சிங்கப்பூர் நில ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் டிராவல் எக்ஸ்போ 2023!, பயணத் தேர்வில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம்!
சிங்கப்பூரில், மாறிவரும் வாழ்க்கைமுறைக்கு ஏற்றவாறு இப்படியான, இடைக்காலக் குடியிருப்புப் பகுதிகளை அடையாளம் காண சிங்கப்பூர் நில ஆணையம் தொடர்ந்து, பல்வேறு நிறுவனங்களுடன் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள சிங்கப்பூர் நில ஆணையத்தின் நிர்வாக இயக்க அதன் தலைமை நிர்வாக அதிகாரி கொலின் லோ, நவீனி மாறுபட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கான தேவை இருப்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்து சாலைக் கட்டடம், மறுசீரமைக்குப்பின் ‘1925 குவாட்டர்ஸ்’ என்று பெயரிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகில் வாழத் தகுந்த நகரங்கள் டாப் 20ல் சிங்கப்பூர்! சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?