தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் அனுப்பி வைத்த அரிசிப்பை வந்து சேர்ந்தது. அதை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என தமிழக மக்களுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் சிங்களவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் அனுப்பி வைத்த அரிசிப்பை வந்து சேர்ந்தது. அதை நாங்கள் பெற்றுக் கொண்டோம் என தமிழக மக்களுக்கும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் சிங்களவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த நெருக்கடியான நேரத்தில் நீங்கள் அனுப்பியுள்ள இந்த அரிசி எங்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சிப் பட கூறியுள்ளார். தற்போது இந்த கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர், ஒவ்வொரு நாளும் அங்கு நிலைமை மோசமடைந்து வருகிறது, ராஜபக்சே சகோதரர்களின் தவறான பொருளாதாரக் கொள்கையே நாட்டை சீரழித்து விட்டது எனக் கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாக கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை விட்டு தப்பி தலைமறைவாகி விட்டனர்.
இந்திய அரசு இதுவரை 4 பில்லியன் அளவிற்கு அந்நாட்டுக்கு நிதி உதவி செய்துள்ளது. ஏராளமான மருந்துப் பொருட்கள் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக விலைக்கு உணவுப் பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், பணம் இருந்தாலும் கடைகளில் உணவுப் பொருட்கள் இல்லை, இதனால் மக்கள் வெறுமையுடன் திரும்பி வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் பணம் இல்லை. இந்நிலையில்தான் அந்நாட்டு மக்களுக்கு உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது.
இதையும் படியுங்கள்: rahul: ராகுல் காந்தி கைது: குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
அதற்காக தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று தமிழக அரசு உணவு பொருட்களை அனுப்பி வைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்: மத்திய அரசுக்கு நெருக்கடி: கறுப்பு ஆடை அணிந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் போராட்டம்
தமிழக அரசின் உணவுப் பெருட்கள் அங்கு மக்களுக்கு பாராபட்சமின்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு இலங்கை சேர்ந்த தலைவர்கள் மனமுவர்ந்து தமழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் அந்த நாட்டைச் சேர்ந்த 63 வயது முதியவர் தமிழக முதலமைச்சருக்கு மனமார நன்றி தெரிவித்து கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது :-
நான் சிங்கள மதத்தைச் சேர்ந்த 63 வயது விக்ரமஸ்ரி சென்ட்ரல் ஹில் சபரகமுவா மாகாணம், கெகலே மாவட்டம் உண்டுகோடா கிராமத்தைச் சேர்ந்தவன். நான் முதற்கண் எனது நன்றியை உங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நெருக்கடியான நேரத்தில் சரியான நேரத்தில் நீங்கள் எங்களுக்கு அரிசிப் பைகளை அனுப்பி வைத்திருக்கிறீர்கள், இன்று நான் 10 கிலோ அரிசி பெற்றுக்கொண்டேன், நானும் எனது மனைவியும் ஒன்றாக வசித்து வருகிறோம், என் மனைவி இருதய நோயாள் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாங்கள் வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம், எங்களின் அன்றாட வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எங்களது சில்லரை வியாபாரம் படுத்துவிட்டது, மீண்டும் எனது நன்றியை எனது ஆழ்மனதில் இருந்து உங்களுக்கு தெரிவிக்கிறேன், இலங்கை மக்கள் மீதான உங்கள் கரிசனத்திற்கு உங்களின் அக்கரைக்கு மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு விக்ரமஸ்ரி கடித த்தில் கூறப்பட்டுள்ளது.