தாய்லாந்து நாட்டின் இரவு நேர கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாயினர். 40 பேர் காயம் அடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் இரவு நேர கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியாயினர். 40 பேர் காயம் அடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் சட்டாஹிப் மாவட்டத்தில், சோன்புரி மாகாணத்தில் இருக்கும் மவுன்ட்டன் பி நைட்ஸ்பாட் கிளப்பில் நேற்றிரவு 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவை மீட்புக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், கிளப்பில் இருந்தவர்களின் ஆடைகளில் தீ பிடித்து, அலறியவாறு அவர்கள் அங்கும், இங்கும் ஓடும் பரிதாப காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க;- ஆணுறை அணியாமல் உடலுறவு கொண்டால் பாலியல் குற்றம்? நீதிமன்றம் அதிரடி..!
கிளப்பின் சுவர்களில் காணப்பட்ட எளிதில் தீ பிடிக்கும் நுரையின் மூலம் தீ வேகமாக பரவியதாக தெரிய வந்துள்ளது. தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான நான்கு பெண்கள், ஐந்து ஆண்களின் உடல்கள் குளியலறைக்கு அருகில் கருகிய நிலையில் கிடந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் இரவு நேர கிளப்புகள் அதிகளவில் இருக்கின்றன. பல ஆணடுகளாக இவற்றின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- இலங்கை கொழும்பு அருகே துப்பாக்கிச்சூடு… ஒருவர் பலி… பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!