அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலையால் வால்மார்ட் நிறுவனமும் ஆட் குறைப்பில் இறங்க உள்ளது.
அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலையால் வால்மார்ட் நிறுவனமும் ஆட் குறைப்பில் இறங்க உள்ளது.
மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் நிறுவனம், குறைந்தபட்சம் 200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க இருப்பதாக தி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளேடு தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக நகை, பணம் எவ்வளவு வெச்சுருக்கலாம்? வருமானவரித் துறையிடம் சிக்காமல் இருக்க இதைப்படிங்க
அர்கான்சாஸ் தலைமை அலுவலகம், பென்டன்வி்ல்லே ஆகியவற்றிலிருந்து ஊழியர்களை நீக்க இருப்பதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது. வால்மார்ட் நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்யும் பணி என்று வால்மார்ட் தெரிவித்துள்ளது.
ஆனால் உண்மையில் வால்மார்ட் நிறுவனத்தின் லாபம் படிப்படியாகக் குறைந்து வருகிறது, ஊழியர்களுக்கான செலவு, ஊதியம் போன்றவை அதிகரிப்பால், இந்த நடவடிக்கையில் வால்மார்ட் நிறுவனம் இறங்கியது.
வால்மார்ட் செய்தித்தொடர்பாளர் அன்னே ஹாட்பீல்ட் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ எங்களின் கட்டமைப்பு வசதி, நிர்வாக சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். சில குறிப்பிட்ட பணியிடங்களில் மட்டும்தான் ஆட்குறைப்பு நடக்கிறது. நிறுவனம் நீண்டகாலத்துக்கு சிறப்பாக நடக்கவே இந்த ஏற்பாடு” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே வால்மார்ட் சில்லரை வர்த்தகம் தவிர, இவர்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம் மருத்துவம், விருந்தோம்பல் ஆகிய துறைகளிலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கம், மெல்லமெல்ல அமெரிக்கா பொருளாதார மந்தநிலைக்கு இழுக்கப்படுகிறது. இதனால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆட்குறைப்பு கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக டெஸ்லா, நெட்பிளிக்ஸ், காயின்பேஸ் குளோபல் ஆகியவை ஏற்கெனவே ஆட்குறைப்பு செய்துள்ளன, கூகுள் நிறுவனம் புதிதாகஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துள்ளது.
5ஜி அலைக்கற்றை ஏலம் முடிந்தது: 7 நாட்களில் ரூ.1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக விற்பனை
அமெரிக்காவில் உணவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், வால்ட்மார்ட் லாபம் குறைந்தது. அமெரிக்காவில் அதிகமான ஊழியர்களுடன் செயல்படும் தனியார் நிறுவனம் வால்மார்ட். இந்த நிறுவனத்தில் 23 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் அமெரிக்காவில் மட்டும் 17 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது