ஆசியாவில் மிகவும் பரபரப்பான நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அதிபர் கிம் ஜாங் உன் செய்த சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவில் அடிக்கடி நடத்தப்படும் அணு ஆயுத சோதனைகள், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள், அமெரிக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போன்றவையே இந்த பரபரப்புக்கு காரணம். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை என்பது கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை அழிக்க உருவாக்கப்பட்டவை. மற்ற ஏவுகணைகளை போல வானத்தில் பறக்காமல் வான்பரப்பை விடு விண்வெளிக்கு சென்றுவிடும். இதனால் ரேடாரில் கண்களில் சிக்காது. பின்னர் இலக்குக்கு நேரே விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி பாயும்.
இதையும் படிங்க..வாரிசை சந்தித்த வாரிசு..! முதலமைச்சர் ஸ்டாலினை திடீரென சந்தித்த ஆதித்யா தாக்கரே - 2024 தேர்தல் முன்னோட்டமா.?
இதனை ஒரு முறை ஆன் செய்துவிட்டால் ஆஃப் செய்ய இயலாது. இவ்வளவு ஆபத்தான ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதனை செய்து வருவது தென் கொரியா மற்றும், அண்டை நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தொடர் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால்தான் நாங்கள் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ளோம் என்று வடகொரியா கூறியிருக்கிறது. இந்த பிரச்னை இப்படி இருக்க மறுபுறம் அதிபர் கிம் ஜாங் உன் தலைமறைவாவதும், பின்னர் திடீரென ஒருநாள் டிவியில் தோன்றி பேட்டியளிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.
வடகொரியாவில் இந்த வாரம் கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற உள்ள சூழலில் அதிபர் கிம் ஜாங் உன் திடீரென மாயமாகிவிட்டார் என மீண்டும் வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில் திடீர் சர்ப்ரைஸாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்பில் தனது 10 வயது மகள் ஜூ ஏவை அழைத்து வந்து அதிர்ச்சியை அளித்துள்ளார் கிம்.
கிம்மின் தந்தை வடகொரியாவின் அதிபராக இருந்து போது கிம் ஜாங் உன்-ஐ மக்களிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரது மறைவுக்கு பின்னர் கிம் ஜாங் உன் வடகொரிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். கிம் தனது 10 வயது மகளை அறிமுகப்படுத்தியிருப்பது அப்பட்டமான வாரிசு அரசியல் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளது.
கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் தான் இவர் என்றும் கூறப்படுகிறது. ஆண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், பெண்களுக்கு முக்கியத்துவம் தந்தால் தனது அரசு மீது மக்களுக்கு இருக்கும் விமர்சனத்தை நீக்க முடியும் என்று நம்புகிறார் கிம்.
இதையும் படிங்க..சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!