ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார்.
ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை தொடர்ந்து செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. மேலும் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் போருக்கு மத்தியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசினார். ஆதாரங்களின்படி, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். அவர்கள் இருவரும் இருதரப்பு மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியா-ரஷ்யா இடையிலான மூலோபாய கூட்டுறவை தொடர்ந்து செயல்படுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. முன்னதாக அஜித் தோவல் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று ரஷ்யா சென்றார்.
இதையும் படிங்க: நேரு பெயரை வைத்துக் கொள்வதில் வெட்கம் ஏன்?: பிரதமர் மோடி கேள்வி
இதுக்குறித்து டெல்லிக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறுகையில், இந்தியாவுடனான உறவை பன்முகப்படுத்த ரஷ்யா விரும்புகிறது. அதனால்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, ரஷ்யாவில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி செய்வது குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் பேசினார். இந்தியாவின் பொருளாதார யதார்த்தத்தையும் அவர் எடுத்துரைத்தார். மேலும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுடனான ஐந்தாவது கூட்டத்தில் அஜித் தோவல் கலந்து கொண்டார். இது ரஷ்யாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது, எந்த நாடும் ஆப்கானிஸ்தானின் மண்ணை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று தோவல் கூறினார்.
இதையும் படிங்க: ஆட்சியைக் கலைத்த கட்சியுடன் கூட்டணியா? திமுகவை விளாசிய பிரதமர் மோடி
ரஷ்யா மற்றும் இந்தியாவைத் தவிர, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அஜித் தோவலின் மாஸ்கோ பயணம் புதுதில்லியில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வந்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தியா பலமுறை மாஸ்கோவுடன் தனது வலுவான உறவை நிரூபிக்க விரும்புகிறது. இருப்பினும், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இந்த நல்லுறவு இன்னும் அமெரிக்காவினால் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும், ரஷ்யா-உக்ரைன் போரில் இந்தியா இதுவரை இரு நாடுகளுக்கும் ஆதரவளிக்கவில்லை. போரைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதி சாத்தியமாகும்.