Turkey Earthquake Death Count:துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 16,0000-த்துக்கு மேல் அதிகரிப்பு!

By Pothy Raj  |  First Published Feb 9, 2023, 1:47 PM IST

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன


துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

நிலநடுக்கம்

Latest Videos

undefined

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப்பகுதியான காஸியென்டெப் நகரிலிருந்து 33 கி.மீ தொலைவில் மையமாகக் கொண்டு திங்கள்கிழமை அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்துக்குப்பின் அடுத்தடுத்து, ரிக்டர் அளவில் 7 புள்ளிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தில் துருக்கி, சிரியா எல்லைப்பகுதி மாகாணங்கள், நகரங்களில் கட்டிடங்கள் இடித்து மண்ணோடு மண்ணாகின.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப்புற நகரங்களில் எங்குபார்த்தாலும் கட்டிடக் குவியல்களாகக் கிடக்கின்றன. மக்கள் வீட்டுக்கு போவதற்கு அஞ்சி சாலையிலிலும், தற்காலிக முகாம்களிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கியுள்ளனர்.

உதவி

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கவும் உலக நாடுகள்உதவி வருகின்றன. மீட்புப்படையினரை அனுப்பி வருகின்றன.

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி 8ஆயிரமாகஅதிகரிப்பு! உறையும் குளிரால் குழந்தைகள் தவிப்பு

உறையவைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் மீட்புப்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை இரு நாடுகளிலும் சேர்த்து  உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிடக் குவியல்கள் இன்னும் கிடப்பதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு சேவை பாதிப்பு

ஆனால், துருக்கியில் மீட்புப்படையினர் குறிப்பிட்ட இடத்தில்தான் இருக்கிறார்கள், பாதிப்பு ஏற்பட்டஅனைத்துப் பகுதிகளுக்கும் செல்லவில்லை என்று மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. பூகம்பத்தின் மையப்பகுதியான காராமனாமராஸ் பகுதியில் இன்னும் மீட்பு நடவடிக்கை முழுவீச்சில் நடக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மக்கள் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறவும், பூகம்பகத்தில் தங்கள் அன்புக்குரியவர்கள் உயிரிழந்தார்களா அல்லது உயிருடன் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர், தவிப்புடன் உள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம்... 11,000-ஐ தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை!!

ஆனால், பூகம்பம் பாதிக்கப்பட்ட இடத்தில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதால், யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நீண்ட முயற்சிக்குப்பின் இன்று காலை முதல் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தொலைத்தொடர்பு சேவை திரும்பியுள்ளது. இதையடுத்து ட்விட்டர்  உள்ளிட்டசமூகவலைத்தளங்கள் மூலம் மக்கள் உறவினர்களுடன் பேசி வருகிறார்கள். 

16ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு

இதுவரை துருக்கியில் மட்டும் 12,873 பேர் உயிரிழந்துள்ளனர், சிரியாவில் 3,162 பேர் உயிரிழ்துள்ளனர், ஒட்டுமொத்தமாக 16 ஆயிரத்து 35பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

5 - 6 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி!.. நிலநடுக்கத்தால் அடுத்து நிகழப்போவது என்ன? ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

துருக்கி, சிரியாவில் உறைபனி வீசுகிறது, மைனஸ் 5 டிகிரி குளிர் நிலவுவதால் காஜியென்டெப் பகுதியில் இரவுநேரத்தில் மீட்புப்பணியில் ஈடுபடமுடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவுநேரங்களில் மக்கள் கார்களிலும், கட்டிட இடிபாடுகளுக்கு அடியிலும், தற்காலிக முகாம்களிலும் தங்கியுள்ளனர். மீண்டும் பூகம்பம் வரக்கூடும் என்ற அச்சத்தால், மக்கள் தங்களின் சொந்தவீட்டுக்குத் திரும்ப அச்சத்துடன் சாலையில் தங்கியுள்ளனர். 

ஐரோப்பிய யூனியன்

துருக்கி,சிரியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க ஐரோப்பிய யூனியன் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. “இது இனவெறிக்கு எதிரான நேரம், மனித உயிர்களைக் காக்க வேண்டும், இதுபோன்ற துயரம் மக்களைத் தாக்கும்போது, யாரையும் தனியாக விடக்கூடாது” என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென் தெரிவித்துள்ளார்.

துருக்கி நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட இந்தியர்கள் நிலை என்ன?

சிரியா கோரிக்கை

இதற்கிடையே பொருளாதாரத் தடைகளை மறந்து தங்கள் நாட்டுக்கு உதவ வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனை சிரியா நாடு கோரியுள்ளது. சிரியாவில் ஏற்பட்டஉள்நாட்டுப் போரில் ரஷ்யாவின் குண்டுவீச்சில் ஏராளமான மருத்துவமனைகள் இடிந்துவிட்டன. மக்களுக்கு அடிப்படை மருத்துவச் சேவைக்கு கடும் சிரமமாகஇருக்கிறது, எரிபொருள், குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்றுசிரியா அரசு தெரிவித்துள்ளது. 

சிரியாவின் கோரிக்கையையடுத்து, மனிதநேய அடிப்படையில் மருந்துகள், உணவுகள், குடிநீர், எரிபொருள் உள்ளிட்டவற்றை வழங்கவும் ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்படும் என்று ஐரோப்பியயூனியன் தெரிவித்துள்ளது


 

click me!