துருக்கியில் 10 இந்தியர்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவரைக் காணவில்லை.
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியர்கள் 10 பேர் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு இந்தியர் மாயமாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கங்களில் உயிரழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதேச சமயத்தில் அண்டை நாடான சிரியாவிலும் நிலநடுக்கத்திற்கு சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடக்கும் என்று சொல்லப்படுகிறது.
இச்சூழலில் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் காசியாபாத் மற்றும் கல்கத்தாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சை வெர்மா, 10 இந்தியர்கள் பூகம்பம் ஏற்பட்ட பகுதிகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
இந்தியர் ஒருவர் காணாமல் போயிருப்பதாவும் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் சஞ்சை வெர்மா தெரிவித்தார். துருக்கியின் மலாட்யா என்ற இடத்திற்கு பணி நிமித்தமாகச் சென்ற அவர் அங்கிருந்த ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் தங்கிய ஹோட்டல் கட்டிடம் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்திருக்கிறது. அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
Walt Disney Laysoff: வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் 7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
“துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அடானா நகரில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. துருக்கி மொழி பேசும் இரண்டு இந்திய அதிகாரிகள் உதவிக்கு உள்ளனர்” என்றார்.
“அங்காராவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சிறப்பு உதவி மையம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 75 இந்தியர்களிடம் இருந்து உதவி கோரி அழைப்பு வந்திருக்கிறது” எனவும் சஞ்சை வெர்மா கூறியுள்ளார்.
துருக்கியில் சுமார் 3 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். 1850 பேர் தலைநகர் இஸ்தான்புல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருக்கின்றனர். 250 பேர் அங்காராவில் உள்ளனர். மற்றவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள்.
டெத் டைவிங் செய்த நார்வே இளம்பெண்... திகைக்கவைக்கும் வீடியோ இணையத்தில் வைரல்!!