துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்த ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இந்த இடிபாடுகளுக்குள் மக்கள் பலர் சிக்கியதை அடுத்து அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 5 - 6 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி!.. நிலநடுக்கத்தால் அடுத்து நிகழப்போவது என்ன? ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்
undefined
ராட்சத கிரேன், பொக்லைன் உள்ளிட்ட நவீன இயந்திரங்களின் உதவியுடன் மக்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் சிலர் உயிருடன் மீட்கப்பட்டாலும் இடிபாடுகளை தோண்டும்போது ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீட்பு மற்றும் மருத்துவக் குழுக்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதையும் படிங்க: துருக்கி நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட இந்தியர்கள் நிலை என்ன?
துருக்கியில் மட்டும் இதுவரை 16 ஆயிரத்து 710 பேரும் சிரியாவில் 3 ஆயிரத்து 162 பேரும் என மொத்தமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,300 ஆக உயர்ந்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஜப்பானின் புகுஷிமா பேரழிவில் உயிழிந்தோரின் எண்ணிக்கையை 18,500 ஆக இருந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதனை மிஞ்சியுள்ளது.