உலக நாடுகளில் மிக வேகமான வளர்ச்சியை இந்தியா தான் பெறப்போகிறது என்று அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ தெரிவித்துள்ளார்.
துபாயில் நடந்த மாநாட்டில் பேசிய அமெரிக்க முதலீட்டாளர் ரே டாலியோ, வரும் ஆண்டுகளில் இந்தியா அதிக வளர்ச்சியை பதிவு செய்யும் நாடாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
துபாயில் நடந்த உலக நாடுகளின் உச்சி மாநாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர் ரே டாலியோ சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த மாநாட்டின் பகுதியாக 'அரசாங்கங்களும் உலகம் விடுக்கும் சவால்களும்' என்ற கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் முகமது பின் அப்துல்லா அல் கெர்காவியுடன் பேசிய டாலியோ இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது கணிப்புகளை முன்வைத்தார்.
Panama bus crash: பனாமா பேருந்து விபத்தில் புலம்பெயர் பயணிகள் 39 பேர் பலி
“இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. கடந்த 10 வருட ஆய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியா மிகப் பெரிய மற்றும் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையப்போகிறது. ஆசியாவின் வலுவான நாடாகவும் இந்தியா உருவெடுக்கும். உலகில் மற்ற நாடுகளைவிட மிகப்பெரிய மாற்றத்தை காணும் நாடாக இந்தியா இருக்கும்” என்று டாலியோ குறிப்பிட்டார்.
மேலும், எதிர்காலத்தின் “இந்தியாவின் முன்னேற்றம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்" எனவும் ரே டாலியோ கணித்துள்ளார். "அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அதிகார மோதல்கள் இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகள் அதில் இருந்து விலகி இருக்கின்றன. போர்களில் ஈடுபாடமல் விலகி இருக்கும் இந்தியா போன்ற நடுநிலை நாடுகள் முன்னேற்றம் அடையும் வாய்ப்பு உள்ளது" என்றும் டாலியோ தெரிவித்திருக்கிறார்.
Panama bus crash: பனாமா பேருந்து விபத்தில் புலம்பெயர் பயணிகள் 39 பேர் பலி
'மாறும் உலக ஒழுங்கைக் கையாள்வதற்கான கோட்பாடுகள்' என்ற புத்தகத்தை எழுதியுள்ள டாலியோ, அதில் பத்து நாடுகளின் 500 ஆண்டுகால வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். டச்சு, பிரிட்டிஷ், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.
“நான் 1949ஆம் ஆண்டு உலகப் போர் முடிந்தபின் பிறந்தவன். என் பெற்றோர் அன்பானவர்கள். என் நாடு அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குவதாக இருந்தது. இன்று மிகவும் வித்தியாசமான சூழல் நிலவுகிறது. காலம் முற்றிலும் மாறிவிட்டது. எனவே இன்று நான் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்று அவர் கூறினார்.
Facebook Fake ID: மனைவியின் நிர்வாணப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட கணவர்!