பனாமாவில் ஆபத்தான டேரியன் வனப்பகுதி வழியாக மலைப்பாதையில் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 39 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 66 பேரை ஏற்றிகொண்டு மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து புதன்கிழமை அதிகாலை மலையில் இருந்து சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 39 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் தங்கள் தாய்நாட்டை விட்டு புலம்பெயரந்தவர்கள். அவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேறும் எண்ணத்துடன் இருந்தனர் எனவும் குவாலாக்காவில் உள்ள புலம்பெயர்ந்தோர் வரவேற்பு மையத்தை நெருங்கும் சமயத்தில் விபத்து நேர்ந்துவிட்டது எனவும் பனாமா அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்துக்குள்ளான வாகனம் தவிர வேறு சில வாகனங்களிலும் இதேபோல புலம்பெயர்ந்தவர்கள் வந்துள்ளனர். அவர்கள் எந்தெந்த நாட்டுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பெரும்பாலானவர்கள் கரீபியின் தீவில் உள்ள ஹைதி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று பனாமாவின் குவாலாக்கா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
Ray Dalio: உலக நாடுகளில் அதிக வளர்ச்சியை அடையப்போவது இந்தியாதான் - ரே டாலியோ கருத்து
கொலம்பியாவை மத்திய அமெரிக்காவுடன் இணைக்கும் டேரியன் காட்டுப் பகுதி உள்ளது. அந்த வழியாக கடுமையான மலையேற்றப் பாதையில் பயணித்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்து விபத்து நடந்துள்ளது.
பனாமா அதிபர் நிட்டோ கார்ட்டிசோ விபத்து குறித்து ட்விட்டரில் பதிவிட்டபோது, “இது பனாமாவுக்கு வருத்தமளிக்கும் செய்தி” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
யார் இந்த மாதா ஹரி? ஜெர்மனி நாட்டுக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டுக்கு சவாலாக இருந்த நடன மங்கை!!
இதனிடையே கியூபா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் புரூனோ பரில்லா, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, பொருளாதார நெருக்கடியில் இருக்கும் வெனிசுலாவில் இருந்து மட்டும் 70 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்து டேரியன் வனப்பகுதி வழியாகப் பயணித்துள்ளனர்.
2021ஆம் ஆண்டில் 1.33 லட்சம் புலம்பெயர்ந்த மக்கள் டேரியன் வனப்பகுதியைக் கடந்து சென்றுள்ளனர். 2022ஆம் ஆண்டில் வரலாறு காணாத எண்ணிக்கையாக, மொத்தம் 2.5 லட்சம் பேர் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து இந்தப் பாதை வழியாகச் சென்றுள்ளனர்.
Petrol Price in Pakistan:பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாற்று உயர்வு