Population in China: குறையும் மக்கள் தொகை, பதறும் சீனா! இளைஞர்களிடம் உயிரணு தானம் கோரி விளம்பரம்

Published : Feb 16, 2023, 02:22 PM IST
Population in China: குறையும் மக்கள் தொகை, பதறும் சீனா! இளைஞர்களிடம் உயிரணு தானம் கோரி விளம்பரம்

சுருக்கம்

சீனாவில் முன்எப்போதும் இல்லாத அளவு மக்கள் தொகை குறைந்துவருவதால், 20 முதல் 40வயதுள்ள இளைஞர்களிடம் இருந்து உயிரணுக்களை தானமாக சீன உயிரணு வங்கி கோரியுள்ளது.

சீனாவில் முன்எப்போதும் இல்லாத அளவு மக்கள் தொகை குறைந்துவருவதால், 20 முதல் 40வயதுள்ள இளைஞர்களிடம் இருந்து உயிரணுக்களை தானமாக சீன உயிரணு வங்கி கோரியுள்ளது.

சீன தேசிய  புள்ளியியல் அமைப்பின் தகலவின்படி, “ கடந்த 61 ஆண்டுகளில் இல்லாத அளவு சீனாவின் மக்கள் தொகைப் பெருக்கம் எதிர்மறையான நிலைக்குச் சென்றுவிட்டது. 2021ம் ஆண்டைவிட, 2022ம் ஆண்டில் 8.50 லட்சம் மக்கள் தொகை குறைந்துவிட்டது.”

இதையடுத்து மக்கள் தொகையைப் பெருக்க சீன அரசு பல்வேறு சலுகைகளை, மக்களுக்கு அறிவித்து வருகிறது. குறிப்பாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்கியது, இரு குழந்தைகள் பெற்றுக்கொள்வோருக்கு வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளையும் அறிவித்தது. 

பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சி! பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரலாற்று உயர்வு

ஆனால், நிலைமை மோசமடைந்து கொண்டே செல்வதை உணர்ந்தசீன அரசு 2021ம் ஆண்டிலிருந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஒருவர் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் எனக் கொண்டு வந்தது. 
கடந்த 1989ம் ஆண்டில் சீனாவின் குழந்தை பிறப்பு ஆண்டுக்கு 2.40 கோடியாக இருந்தநிலையி், திடீரென தற்போது 95.60 லட்சமாகக் குறைந்துவிட்டதுதால்தான் அரசு பதறுகிறது. 

ஏனென்றால், பொருளாதார வளர்ச்சிக்கு உழைக்கும் வயதினர்தான் முதுகெலும்பு. அதிலும் குறிப்பாக 20 வயதுமுதல் 50 வயதுள்ளோர் அதிகமாக இருந்தால் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும். 
ஆனால், சீனாவில் மக்கள் தொகை குறைந்துவரும் சூழலில் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியோர் எண்ணிக்கை அதிகரி்த்துவிடும். இதனால் இயல்பாகவே பொருளாதார வளர்ச்சி குறைந்துவிடும். 

பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளதாரம்! பால் லிட்டர் ரூ.210, கோழி இறைச்சி கிலோ ரூ.800!

20 வயதுமுதல் 50வயதுள்ள பிரிவினர் குறைந்து பொருளாதாரம் வளர்ச்சி குறைந்துவிட்டால், மீண்டும் பொருளாதாரத்தை உயர்த்துவது எளிதானது அல்ல. அதற்கு ஒரு தலைமுறை தேவைப்படும் என்பதால் சீன அரசு பதறுகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதில் மக்களுக்கு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கி வருகிறது.

கடந்த ஆண்டில் முதல்முறையாக குழந்தை பிறப்பைவிட உயிரிழப்பு அதிகரி்த்தது. இது சீனாவுக்கு எச்சரிக்கை மணியாக அடித்தது. குழந்தை பிறப்பைவிட, மக்கள் உயிரிழப்பு அதிகரிக்கும்பட்சத்தில் மக்கள் தொகை வளர்ச்சி சரியத் தொடங்கும் அது பொருளாதாரத்தை பேராபத்தில் தள்ளும்.பாலின விகிதமும் சமநிலையற்ற நிலைக்குச் செல்லும் என்பதால் சீன அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, சீனாவில் உள்ள சீனா உயிரணுவங்கி ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது “ அதில் 20 முதல் 40வயதுள்ள, 5.57 அடி உயரமுள்ள, எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத, நோய் இல்லாத, பரம்பரை நோய் இல்லாத, முடி உதிருதல் இல்லாத இளைஞர்களின் உயிரிணுக்கள் தேவை”எனத் தெரிவித்துள்ளது. 
இந்த விளம்பரம் பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள், ஆரோக்கியமான, உடல்நலமுள்ள இளைஞர்களை குறிவைத்து விளம்பரம் வெளியிடப்படுகிறது. 

வடகொரியாவில் ‘வாரிசு’ அரசியல்.. துணிவுடன் வெளியே வந்த அதிபர் கிம் ஜாங் உன்..! உலக நாடுகள் ஷாக்!

சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் “திருமணம் செய்து குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் மட்டும் பெய்ஜிங்கில் 15 சதவீதம் பேர் உள்ளனர், தியான்ஜின் நகரில் உயிரணு பிரச்சினைகளால் 40 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் தொகை கண்காணிப்பு மற்றும் குடும்ப மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் யாங் வென்ஜுவாங் கூறுகையில் “ மக்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தை அதிகப்படுத்த சீன அதிகாரிகள் கிராமங்களில் பிரச்சாரம் செய்ய வேண்டும், குழந்தை பேற்றை அதிகரிக்க மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை! பிரதமர் மோடி மகிழ்ச்சி!
உக்ரைன் போரில் தோற்றுவிட்டது.. ரஷ்யா தான் பலமான நாடு.. கடுப்பாகி கத்திய டிரம்ப்!