சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்று 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன், விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிளம்புகள் கிளம்பிய காட்சிகள் பார்ப்பவர்களை பதபதக்க வைத்தது.
சீனாவின் ஹூனான் மாகாணத்தில் நேற்று 42 மாடிக் கட்டிடத்தில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. கரும்புகையுடன், விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிளம்புகள் கிளம்பிய காட்சிகள் பார்ப்பவர்களை பதபதக்க வைத்தது.
ஹூனான் மாகாணத்தில் உள்ள சாங்கா நகரில் லோட்டஸ் கார்டன் சீனா டெலிகாம் 42 மாடிக்கட்டிடம் உள்ளது.
undefined
வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு அடுத்த இறுதி சடங்கு.. சர்ச்சையில் சிக்கிய ஹாரி - மேகன் தம்பதி - அடுத்தடுத்து பரபரப்பு!
இந்த கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று 3.48 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ ஒரு மாடியிலிருந்து அடுத்தடுத்த மாடிக்கு வேகமாகப் பரவத் தொடங்கியது.
长沙荷花园电信大厦,但愿没有人员伤亡 pic.twitter.com/oLT35TbazR
— Water (@lengyer)கட்டிடம் உயரத்தில் இருந்ததால், காற்றின் வேகத்தால் தீ வேகமாக அடுத்தடுத்த மாடிக்கு பரவத் தொடங்கியது.
தீவிபத்துக் குறிந்து அறிந்ததும் 36 தீயணைப்பு வாகனங்கள், 300க்கும் மேற்பட்ட தீ தடுப்பு வீரர்கள் வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். நீண்ட போராட்டத்துக்குப்பின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் இந்தியா கவனம்: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
சீன ஊடகங்கள் செய்தியின்படி, 42 மாடிக்கட்டிடத்தில் 12 மாடிகள் முற்றிலும் எரிந்துசாம்பாலகின என்று தெரிவி்த்துள்ளது. ஆனால், உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
这是机房炸了吗?🤔 pic.twitter.com/fw4r3Q6XRh
— 希佩尔海军上当号 (@littlebingo3)தீ விபத்து நடந்த லோட்டஸ் கட்டிடம் 715 அடி உயரம் கொண்டது. கடந்த 2000ம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். சாங்ஸா நகரில் மிகவும் உயரமான கட்டிடம் இதுவாகும்.
சீனாவில் இதுபோன்ற தீவிபத்துகள் அடிக்கடி நடக்கும். உயரமான கட்டிடங்களில் தீ தடுப்பு வழிமுறைகள் சரியாக வைக்கப்பட்டுள்ளதா, பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த கடினமான விதிமுறையும் இல்லை.
சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி
இதனால்தான் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இந்த தீவிபத்துக்கான காரணம் என்ன என்று இதுவரை சீன அரசு தெரிவிக்கவில்லை.