ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி மறைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் ராணியின் உடலுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து புதிய மன்னராக 73 வயது நிரம்பிய சார்லஸ் பொறுப்பேற்றிருக்கிறார். இந்நிலையில், ராணி இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக பல நாடுகளுக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், முதல் பெண்மணி ஜில் பிடனுடன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கான அழைப்பை முறையாக ஏற்றுக்கொண்டுள்ளார். துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..குழந்தை பிறப்பது எப்படி தெரியுமா? .. அக்கவுண்டன்சி ஆசிரியரை சிக்க வைத்த பள்ளி மாணவிகள் - திடீர் திருப்பம்
நெதர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், டென்மார்க் மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்களும் இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்துகிறார்கள். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்கும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் லண்டன், பிரிட்டன் செல்கிறார்.
இறுதி சடங்கு நிகழ்வில் அமைதியை கடைப்பிடிக்கும் விதமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தனது விமான இயக்க அட்டவணையில் 15% மாற்றங்களை செய்து 100 விமானங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு ரத்து செய்துள்ளது. ஒரே நேரத்தில் இந்த அத்தனை விமானங்களும் ரத்து செய்யப்படாமல், நேரம் பிரிக்கப்பட்டு விமான இயக்கங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
ராணியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்து முடித்து அனைவரும் சிறிது நேரம் அமைதியை பின்பற்றுவார்கள். இதனை கருத்தில் கொண்டு காலை 11.40 முதல் மதியம் 12.10 வரை 30 நிமிடங்களுக்கு விமான இயக்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல ராணியின் உடல் ஊர்வலத்தின்போது மதியம் 1.45 மணிக்கு தொடங்கி 35 நிமிடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படாது.
பிறகு மாலை மாலை 3.05 மணிக்கு தொடங்கி 1.40 மணி நேரம் வரை அதாவது மாலை 4.50 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச் சடங்குக்குப் பிறகு இங்கிலாந்தில் நடக்கும் அரசின் முதல் இறுதி சடங்கு இதுவாகும். ராணி எலிசபெத்தின் இறுதி நிகழ்வுக்காக கணவர் ஹாரியுடன் இங்கிலாந்து வந்துள்ள மேகன் மார்கல், இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக இருக்கிறது.
பிரிட்டன் இளவரசர் ஹாரியை திருமணம் செய்ததன் மூலம் இங்கிலாந்தின் இளவரசியான முதல் கருப்பின பெண் என்ற பெருமையை மேகன் பெற்றிருந்தார். அரச குடும்பத்தில் இருந்த நிறவெறி சர்ச்சையால் அரண்மனையில் இருந்தும், தாங்கள் அரசு குடும்பத்தி இருந்து வெளியேறுகிறோம் என்றும் ஹாரி - மேகன் தம்பதி அறிவித்து வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு..உடலுறவு கொள்வதில் பிரச்னை.. 8 ஆண்டுகள் கழித்து கணவன் ஒரு பெண் என அறிந்த மனைவி !