SCO summit 2022: மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் இந்தியா கவனம்: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

By Pothy Raj  |  First Published Sep 16, 2022, 1:54 PM IST

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.


மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியில்தான் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது என்று உஸ்பெகிஸ்தானில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த 2001ம் ஆண்டுஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. இதில் 6 நிறுவன,முழு உறுப்பினர்களான சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா,தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளும், இந்தியாவும், பாகிஸ்தானும் 2017ல் முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன.

Tap to resize

Latest Videos

கொரோனா பரவலுக்குப்பின் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்பதால், மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, தனிவிமானத்தில் நேற்று புறப்பட்டு சாமர்கண்ட் நகரம் சென்றடைந்தார். 

பாகிஸ்தான் பிரதமருக்கு இப்படி ஒரு அவமானமா ! சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ரஷ்ய அதிபர் புதின்

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரு பிரிவுகளாக நடக்க உள்ளது. ஒரு பிரிவு ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகள் மட்டும்பங்கேற்கும் கூட்டமாகும். 2வது பிரிவு பார்வையாளர்கள் நாடுகளும், சிறப்பு அழைப்பு நாடுகளும் நடக்கும் கூட்டமாகும்.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், உஸ்பெகிஸ்தான் பிரதமர் ஷவ்காத் மிர்ஜியோவேவ், ஈரான் அதிபர் ரெய்சி ஆகியோருடன் பேச்சு நடத்தஉள்ளார். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமருடன் பேசுவார் என்பது குறித்த தகவல் இல்லை.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று தொடங்கியதும், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், உஸ்பெகிஸ்தான் பிரதமர் ஷவ்காத் மிர்ஜியோவேவ், ஈரான் அதிபர் ரெய்சி உள்ளிட்ட உறுப்பு நாடுகள், நிறுவன நாடுகளின் தலைவர்கள் சேர்ந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி இன்று பங்கேற்பு: விவாதிக்கப்படும் அம்சங்கள் என்ன?

அதன்பின் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: 

இந்த உலகம் கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. உலக சப்ளையை பலவிதமான தடைகள் இருந்தன, குறிப்பாக கொரோனா பரவல், உக்ரைன் பிரச்சினை முக்கியமானது. நாங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம். 

 

My remarks at the SCO Summit in Samarkand. https://t.co/6f42ycVLzq

— Narendra Modi (@narendramodi)

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாதிரியில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு துறையிலும் புத்தாக்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.இந்தியாவில் 70ஆயிரம் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. 100க்கும் மேற்பட்ட தனிப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  உலகளவில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளோம் என்று கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினைக் கொல்ல முயற்சி! சொந்த பாதுகாப்பாளர்கள் தாக்குதல்?

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், குஜராத்தில் பாரம்பரிய மருத்துவத்துவத்துக்கான சர்வதேச மையத்தை உருவாக்கினோம். உலகிலேயே முதல்முறையாக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சிகிச்சை முறை இங்குதான் உள்ளது. பாரம்பரிய மருந்துகள் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சினைகளால் உலகளவில் சப்ளை சங்கிலி பாதிப்பட்டது. இதனால் சர்வதேச சப்ளை சங்கிலி பாதிக்கப்பட்டு உலகளவில் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதை சரி செய்ய வேண்டியதும், நம்பகமான, மீள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட சப்ளை சங்கிலிகளை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இருக்கிறது.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப தேவையானஉதவிகளை வழங்க வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையே இந்தியா பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை கோருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

click me!