உஸ்பெகிஸ்தான் நாட்டின் ச
PM Modi to attend SCO summit in Uzbekistan:
மர்கண்ட் நகரில் இன்று நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் இன்று நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சிக்கல்கள், வர்த்தகம், முதலீடு, எரிபொருள் சப்ளை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமருக்கு இப்படி ஒரு அவமானமா ! சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்த ரஷ்ய அதிபர் புதின்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த 2001ம் ஆண்டுஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. இதில் 6 நிறுவன,முழு உறுப்பினர்களான சீனா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், ரஷ்யா,தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளும், இந்தியாவும், பாகிஸ்தானும் 2017ல் முழு உறுப்பு நாடுகளாக இணைந்தன.
கொரோனா பரவலுக்குப்பின் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு என்பதால், மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, தனிவிமானத்தில் நேற்று புறப்பட்டு சாமர்கண்ட் நகரம் சென்றடைந்தார்.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, பாகிஸ்தான் பிரதமர் ஷென்பாஸ் ஷெரீப் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இரு பிரிவுகளாக நடக்க உள்ளது.
ஒரு பிரிவு ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகள் மட்டும்பங்கேற்கும் கூட்டமாகும். 2வது பிரிவு பார்வையாளர்கள் நாடுகளும், சிறப்பு அழைப்பு நாடுகளும் நடக்கும் கூட்டமாகும்.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், உஸ்பெகிஸ்தான் பிரதமர் ஷவ்காத் மிர்ஜியோவேவ், ஈரான் அதிபர் ரெய்சி ஆகியோருடன் பேச்சு நடத்தஉள்ளார். ஆனால், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமருடன் பேசுவார் என்பது குறித்த தகவல் இல்லை.
பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ உஸ்பெகிஸ்தான் பிரதமர் ஷவ்காத் மிர்ஜியோவேவ் சந்திக்க ஆவலாக இருக்கிறேன். கடந்த 2018ம் ஆண்டு சந்திப்பை நினைவு கூற விரும்புகிறேன். 2019ம் ஆண்டு குஜராத் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உஸ்பெகிஸ்தான் பிரதமர் பங்கேற்றார். அவருடனும், பிற நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்த இருக்கிறேன்”எ னத் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் கவத்ரா கூறுகையில் “ பிரதமர் மோடியின் எஸ்சிஓ மாநாடு பங்கேற்பின் முக்கியத்துவம் மாநாட்டின் இலக்குகள் குறித்ததாக இருக்கும்”
எதைப்பற்றி விவாதிக்கப்படும்
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு, பிராந்தியத்தில் பாதுகாப்பு குறித்த நிலை, பிராந்தியத்தில் நம்முடைய ஒத்துழைப்பு, பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் நட்புறவை வலுப்படுத்துதல், ஊக்குவித்தல் போன்ற முக்கிய அம்சங்களாக விவாதிக்கப்படும் " எனத் தெரிவித்தார். சீன அதிபர், பாகிஸ்தான் பிரதமருடன் மோடி சந்திப்பு குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.